வங்கியில் வேலை வேண்டுமா? 350 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) வங்கியில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 350 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளத்தை பொறுத்தவரை குறைந்தப்பட்சம் ரூ.44 ஆயிரம் முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உள்ளது. கடந்த 1911ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வங்கி, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகள் மூலம் சேவைகளை வழங்கி வருகிறது.
பணியிடங்கள் விவரம்:

தற்போது இந்த வங்கிகளில் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை அதிகாரி மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரி பதவிகளில் காலியாக உள்ள 350 இடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் மத்திய அரசு பணி நிரந்தர அடிப்படையில் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.
வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை அதிகாரி (பிரிவு III) பதவிக்கு 50 இடங்களும், மார்க்கெட்டிங் அதிகாரி (பிரிவு I) பதவிக்கு 300 இடங்களும் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை அதிகாரி ஏதேனும் ஒரு துறையில் முழுநேரப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். CFA/CA அல்லது தொடர்புடைய பிரிவில் MBA போன்ற தொழில்முறைத் தகுதியுடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் அதிகாரி நிலையில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் தேவை. அதில் மூன்று வருடங்கள் வர்த்தக நிதி, அந்நியச் செலாவணி செயல்பாடுகள் அல்லது IBU-கிஃப்ட் சிட்டி பிரிவில் பணிபுரிந்திருக்க வேண்டும். தற்போது அந்நியச் செலாவணித் துறையில், குறிப்பாக விற்பனை அல்லது வணிக மேம்பாட்டில் பணிபுரிபவராக இருத்தல் அவசியம். NBFCகள், RRBகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது காப்பீட்டுத் துறையில் பணிபுரியும் நிரந்தர அல்லது பகுதிநேர ஊழியர்களுக்கு இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.
மார்க்கெட்டிங் அதிகாரி:
ஏதேனும் ஒரு துறையில் முழுநேரப் பட்டம் மற்றும் மார்க்கெட்டிங்கில் இரண்டு வருட முழுநேர MBA/PGDBA/PGDBM/PGPM/PGDM முடித்திருக்க வேண்டும்.
டிகிரி பெற்ற பின் இரண்டு வருட அனுபவம் தேவை. இதில் BFSI (வங்கி நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் ஒரு வருடம் தொடர்ச்சியான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
* வயது வரம்பை பொறுத்தவரை 01.01.2026 தேதிய நிலவரப்படி கணக்கில் கொள்ளப்படும். இதன்படி வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை அதிகாரி பதவிக்கு 25 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* மார்க்கெட்டிங் அதிகாரி பதவிக்கு 22 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் வயது தளர்வுகள் வழங்கப்படும்.
சம்பள விவரம்:
* வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை அதிகாரி - மாதம் ரூ. 85,920/- முதல் ரூ.1,05,280/- வரை வழங்கப்படும்.
* மார்க்கெட்டிங் அதிகாரி - மாதம் ரூ. 44,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும்.
தேர்வு முறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு தேதிக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னர், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் தேர்வுக்கான ஹால் பாஸ் அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக கட்ட வேண்டும். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.850 கட்ட வேண்டும். ST / SC / முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175 கட்டணம் செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.centralbankofindia.bank.in/-க்கு சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இன்றுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைகிறது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.












Click it and Unblock the Notifications