தேர்வு கிடையாது.. கைநிறைய சம்பளம்.. இந்திய மொழி ஆய்வுக்கான மத்திய நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு
சென்னை: மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, என்ஜினீயரிங், டாக்டர் படிப்பை முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.41 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் (Central Institutute Of Indian Languages அல்லது CIIL) செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளின் வளர்ச்சி மற்றும் ஆய்வுப்பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனம் ஐந்து மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவின் மைசூரில் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுக்கான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எவ்வளவு?
இந்நிலையில் தான் மைசூரில் உள்ள நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி அசோசியேட் பெல்லோ (டெக்னீக்கல்), அசோசியேட் பெல்லோ (டிரான்ஸ்லேட்டர்) அப்பர் டிவிசன் கிளர்க் பணிக்கு தலா ஒரவர், லோவர் டிவிசன் கிளர்க் பணிக்கு 2 பேர், சீனியர் பெல்லோ (அகாடமிக்)/எஸ்ஆர்பி பணிக்கு 4 பேர், சீனியர் பெல்லோ (டெக்னீக்கல்)/எஸ்ஆர்பி பணிக்கு ஒருவர், அசோசியேட் பெல்லோ (அகாடமிக்)/ஜேஆர்பி பணிக்கு 9 பேர், அசோசியேட் பெல்லோ (டிரான்ஸ்லேட்டர்)ஜேஆர்பி, ஆபிஸ் சூப்பிரண்டு/சூப்பர்வைசர் (அட்மினிஸ்ட்ரேசன்) பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டிரான்சிலேட்டர் பணி
மேலும் அசிஸ்டென்ட் ஜிஆர்-II(Accts/Admin) LDC பணிக்கு 2 பேர், அசிஸ்டென்ட் ஜிஆர்-I (Accts/Admin) UDC பணி, லைப்ரேரி அசிஸ்டென்ட், எம்டிஎஸ் பணிக்கு தலா ஒருவர், சீனியர் பெல்லோ (அகாடமிக்), அசோசியேட் பெல்லோ (அகாடமிக்) பணிக்கு தலா 4 பேர், சீனியர் பெல்லோ (டெக்னிக்கல்), அசோசியேட் பெல்லோ (டிரான்சிலேட்டர்), ஆபிஸ் சூப்பிரண்டு/சூப்பர்வைசர், ஜூனியர் அக்கவுன்ட் ஆபிசர், அப்பர் டிவிசன் ஆபிசர், லோவர் டிவிசன் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு தலா ஒருவர் என மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?
ஒவ்வொரு பணிக்கு தனித்தனியாக கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி எம்பிபிஎஸ், பிஇ, பிடெக், எம்சிஏ, மாஸ்டர் டிகிரி, டிகிரி உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கான வயது வரம்பு ஒவ்வொரு வேலைக்கு தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சில பணிகளுக்கு 40 வயதுக்குள்ளும், சில பணிகளுக்கு 45 வயதுக்குள்ளும், சில பணிகளுக்கு 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மொத்தம் 6 பிரிவுகளில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.41 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். அதேபோல் பிற பணிகளுக்கு மாதம் ரூ.37,800, ரூ.37,000, ரூ.27,200, ரூ.21,200, ரூ.19,200 என்ற வகைகளில் சம்பளம் வழங்கப்படும். எந்த பணிக்கு எவ்வளவு சம்பளம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://ciil.org/default.aspx அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் ஜனவரி 17 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
Associate Fellow மற்றும் கிளர்க் பணி அறிவிப்பை காண Click Here
Senior Fellow மற்றும் Administrative பணி அறிவிப்பை காண Click Here
Academic Postion மற்றும் Adminstrative பணி அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications