ரூ.19,000 முதல் ரூ.1.77 லட்சம் ஊதியம்.. மத்திய பட்டு வாரியத்தில் பெங்களூரில் பணி.. சூப்பர் வாய்ப்பு
பெங்களூர்: அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் இயங்கி வரும் மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சமாக ரூ.19 ஆயிரம் முதல் அதிகபட்சமாக மாதம் ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் பெற முடியும்.
மத்திய பட்டு வாரியம்(Central Silk Board) என்பது மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பட்டு வாரியம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரான பெங்களூர் மடிவாளாவில் உள்ளது.
இந்நிலையில் தான் மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

காலியிடங்கள் எவ்வளவு
மத்திய பட்டு வாரியத்தில் மொத்தம் 12 பிரிவுகளில் 142 பணியிடங்கள் நிரப்பப்பபட உள்ளது. அதன்படி அப்பர் டிவிசன் கிளர்க் 85, அசிஸ்டென்ட் சூப்பிரண்ட் (டெக்) 25, ஜூனியர் என்ஜினீயர் (எலக்டரிக்கல்) 5, அசிஸ்டென்ட் டைரக்டர் (ஏ அன்ட் ஏ), ஸ்டெனோகிராபர் (கிரேட் 1), ஜூனியர் ட்ரான்ஸ்சிலேட்டர் (இந்தி), ஸ்டெனோ கிராபர் (கிரேடு 2) ஆகிய பணிகளுக்கு தலா 4 பேர், நூலகம் மற்றும் இன்வோ அசிஸ்டென்ட், சமையல்காரர் பணிகளுக்கு தலா 2 பேர், கம்ப்யூட்டர் ப்ரோகிராமர், பீல்ட் அசிஸ்டென்ட் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
அசிஸ்டென்ட் டைரக்டர் பணிக்கு சிஏ அல்லது மாஸ்டர் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பு அல்லது மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ப்ரோகிராமபர் பணிக்கு எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கணிதம், புள்ளியில், வணிகம், பொருளாதாரம் மற்றும் டிப்ளமோ பிரிவில் கம்யூட்ட்ர் அப்ளிகேஷன் படிப்பை முடித்து 2 ஆண்டு இடிஆர் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அசிஸ்டென்ட் சூப்பிரண்டு, ஸ்டெனோகிராபர், நூலகம் மற்றும் தகவல் அசிஸ்டென்ட் பணிக்கு , அப்பர் டிவிசன் கிளார்க் டிகிரி படிப்பு முடித்திருக்க வேண்டும். ஜூனியர் என்ஜினீயர் (எலக்ட்ரிக்) பணிக்கு எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர் டிரான்சிலேட்டர் (இந்தி) பணிக்கு ஆங்கில பாடத்துடன் மாஸ்டர் டிகிரியை இந்தியில் முடித்திருக்க வேண்டும். பில்ட் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ sericulture படிப்பையும், சமையல் பணிக்கு டிப்ளமோ சமையல் கலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு உண்டு.

மாத சம்பளம் எவ்வளவு?
அசிஸ்டென்ட் இயக்குனர் (ஏ அன்ட் ஏ) பணிக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வரையும், கம்ப்யூட்டர் ப்ரோகிராமர் பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரையும், அசிஸ்டென்ட் சூப்பிரண்ட் (அட்மின்), அசிஸ்டென்ட் சூப்பிரண்டு(டெக்), நூலகம் மற்றும் இன்போ அசிஸ்டென்ட், ஜூனியர் என்ஜினீயர்(எலக்ட்ரிக்கல்), ஜூனியர் ட்ரான்சிலேட்டர் (இந்தி) பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர அப்பர் டிவிசன் கிளார்க், ஸ்டெனோகிராபர் (கிரேடு 2) பணி ஆகியவற்றுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100, பீல்ட் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100, சமையல்காரரருக்கு ரூ.19900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி மாதம் 16ம் தேதிக்குள் மத்திய பட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, ஆவணம் சரிபார்ப்பு, மருத்துவ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் Click Here


Click it and Unblock the Notifications
