சூப்பர் அறிவிப்பு..மகிழ்ச்சியாக இல்லை என்றால் அன்றைக்கு விடுமுறை..இன்ப அதிர்ச்சி தந்த பிரபல நிறுவனம்
பெய்ஜிங்: மகிழ்ச்சியாக இல்லை என்றால் அன்றைக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று சீனாவைச் சேர்ந்த பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அன்ஹேப்பி லீவ் (unhappy leave) என்ற புதிய விடுமுறையை சூப்பர் மார்க்கெட் நிறுவனர் யு டாங்லாய் அறிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய திட்டத்தின்படி ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் அவர்கள் தாராளமாக வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இன்று நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறுபவர்களை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைக்க நிர்வாகத்தால் முடியாது..

சீனாவில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனர், தனது ஊழியர்களுக்கு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையைப் பெற உதவும் வகையில், "மகிழ்ச்சி இல்லை என்றால் விடுப்பு" (unhappy leave) என்பதை அறிமுகப்படுத்தியுள்ளார்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனமான பாங் டோங் லையின் நிறுவனரும் தலைவருமான யூ டோங்லாய், ஊழியர்கள் சந்தோஷமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தான் அன்ஹேப்பி லீவ் என்பதை அறிமுகம் செய்துள்ளார்.
வழக்கமாக pl, cl, sl என்ற மூன்று வகையான விடுமுறை நாம் கேள்வி பட்டிருப்போம். அதாவது Privilege Leave (PL) or Earned Leave (EL) Casual Leave (CL) Sick Leave (SL) Maternity Leave (ML) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விடுமுறைகள் தரப்படுகிறது. ஆனால் ul அன்று அழைக்கப்படும் இந்த அன்ஹேப்பி லீவை சீனாவின் பாங் டோங் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் தங்கள் வசதிக்கேற்ப வழக்கமான விடுமுறை இல்லாமல் 10 நாட்கள் எடுத்து கொள்ள முடியும்.
சூப்பர் மார்க்கெட் நிறுவனர் யூ டோங்லாய் இதுபற்றி கூறுகையில் "ஒவ்வொரு ஊழியருக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நேரங்கள் இருக்கின்றன. எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவித்து அதற்கு விடுமுறை தந்துள்ளேன். எங்கள் பணியாளர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை சுதந்திரமாக தீர்மானிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.. அதனால் தான் வேலைக்கு வெளியே போதுமான ஓய்வு பெற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாக இல்லை என்று கூறி விடுமுறை கேட்டால் இனி எங்கள் நிர்வாகத்தால் மறுக்க முடியாது . புதிய திட்டத்தின்படி ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் வேலையை விட்டு விலகி இருக்க முடியும்.
எனது வேலைவாய்ப்பு கொள்கையின் படி ஊழியர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் மட்டுமே வேலை செய்வார்கள், ஐந்து நாட்களுக்கு மற்றும் வார இறுதி விடுமுறையில் இருப்பார்கள். அவர்கள் 30 முதல் 40 நாட்கள் வருடாந்திர விடுப்பு மற்றும் சந்திர புத்தாண்டின் போது ஐந்து நாட்கள் விடுமுறைக்கு தகுதியுடையவர்கள்" இவ்வாறு கூறினார்.
புதிய விடுப்புத் திட்டம் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அன்ஹேப்பி லீவை ஆதரிக்கவும் செய்கிறார்கள். யூ டோங்லாய் ஒரு "நல்ல முதலாளி" என்று பலர் பாராட்டியுள்ளனர், இந்த விடுப்பு கலாச்சாரம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று சீனாவில் ஆதரிக்கிறார்கள். பலர் தங்கள் வேலை-வாழ்க்கை சமநிலைக்கு யூ டோங்லாய்யின் நிறுவனத்திற்கு மாற நினைக்கிறார்கள்.
சீனாவில் பணியிட கவலை பற்றிய ஒரு கணக்கெடுப்பின்படி, தொழிலாள வர்க்கத்தில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையில் சோர்வாகவோ அல்லது மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறைந்த ஊதியம், சிக்கலான தனிப்பட்ட உறவுகள் மற்றும் கூடுதல் நேர வேலை கலாச்சாரம் போன்றவை தான் காரணம் ஆகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications