கோவை பாலிடெக்னிக் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலை.. 72,000 சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்!
சென்னை: கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளர், நூலகர், ஜூனியர் அஸிஸ்டண்ட், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வெறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூனியர் அஸ்சிஸ்டண்ட், ஸ்டோர் கீப்பர் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். டிகிரி, என் ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை 72 ஆயிரம் வரை வழங்கப்படும்.
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லுரி உள்ளது. 1939 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தக் கல்லூரி அரசு உதவி பெறும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரியில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்:
* ஜூனியர் அசிஸ்டென்ட் - 03
* ஸ்டோர் கீப்பர் - 01
* டைப்பிஸ்ட் - 01
* ஸ்கில்டு உதவியாளர் கிரேடு - II - 03
* ஆய்வக உதவியாளர் - 02
* விரிவுரையாளர் (இயந்திர பொறியியல்) - 01
* விரிவுரையாளர் (மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல்) - 01
* விரிவுரையாளர் (வடிவமைப்பு மற்றும் வரைவு) - 01
* விரிவுரையாளர் (டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்) - 01
* விரிவுரையாளர் (கணிதம்) - 01
* விரிவுரையாளர் (இயற்பியல்) - 01
* நூலகர் - 01 பதவி என மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி;
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட், ஸ்டோர் கீப்பர் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும். டைப்பிஸ்ட் பணிக்கு டைப்பிங் திறன் அவசியம். விரிவுரையாளர் பணிக்கு துறைசார்ந்த பிரிவில் என்ஜினியரிங் அல்லது முதுகலை படிப்புடன் விரிவுரையாளர் பணிக்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.
அதாவது பல்கலைக்கழக மானிய கமிஷன் விதிகள் படி நெட், ஸெல்ட், செட் தேர்வுகளில் தேர்ச்சி அவசியம்.
நூலகர் பணிக்கு நூலக அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு;
ஜூனியர் அசிஸ்டண்ட், ஸ்டோர் கீப்பர், டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
எஸ்சி/எஸ்டி/எஸ்சிஏ பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும், எம்பிசி/ எஸ்சி/பிசிஎம்/பிசி பிரிவினருக்கு 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்:
* ஜூனியர் அசிஸ்டண்ட் - ரூ.19,500 -71,900/-
* ஸ்டோர் கீப்பர் - ரூ.19,500 -71,900/-
* டைப்பிஸ்ட் - ரூ.19,500 -71,900/-
* ஸ்கில்டு அசிஸ்டண்ட்: ரூ.19,500 -71,900/
* ஆய்வக உதவியாளர் - ரூ.19,500 -71,900/- நிலை 8
* விரிவுரையாளர் - ரூ.57,700/
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.psgpolytech.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பதிவு 23.02.2026 தொடங்கி 06.03.2026 நிறைவடையும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க:
https://www.psgpolytech.ac.in/advertisement_Feb2026.php
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications