மாத சம்பளம் ரூ.67 ஆயிரம் முதல் ரூ.1.31 லட்சம்! அழைக்கும் மத்திய அரசு பணி! விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டிஆர்டிஓவில் மாதம் ரூ.67 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் Defence Research And Development Organisation (DRDO) எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இது இந்தியாவின் விண்வெளித்துறை மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்களின் உற்பத்திகளை செய்து வழங்கி வருகிறது இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது.

காலியிடங்கள் எத்தனை?
இந்நிலையில் தான் டிஆர்டிஓ சார்பில் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சயின்டிஸ்ட் எப் பிரிவில் 3, சயின்டிஸ்ட் இ பிரிவில் 6, சயின்டிஸ்ட் டி பிரிவில் 15, சயின்டிஸ்ட் சி பிரிவில் 34 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி; வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு பிஇ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். சயின்டிஸ்ட் எப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதுக்குள்ளும், சயின்டிஸ்ட் டி மற்றும் இ பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 45 வயதுக்குள்ளும், சயின்டிஸ்ட் சி பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது 28.06.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட உள்ளது.

சம்பளம் எவ்வளவு?
சயின்டிஸ்ட் எப் பணிக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 100 கிடைக்கும். சயின்டிஸ்ட் இ பணிக்கு மாத சம்பளமாக 1 லட்சத்து 23 ஆயிரத்து 100 வழங்கப்படும். இதேபோல் சயின்டிஸ்ட் டி பணிக்கு ரூ.78 ஆயிரத்து 800ம், சயின்டிஸ்ட் சி பணிக்கு ரூ.67,700ம் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் இன்டர்வியூ மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை 28.06.2022ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களை rac.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண https://rac.gov.in/download/advt_139.pdf கிளிக் செய்யுங்கள். மேலும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய https://rac.gov.in/index.php?lang=en&id=0 கிளிக் செய்து பயன் பெறலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications