மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.92 ஆயிரம் வரை சம்பளம்.. அதுவும் சென்னையிலேயே.. தேதி முடிய போகுது
சென்னை: சென்னையில் உள்ள ESI அலுவலகத்தில் காலியாக உள்ள 56 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் விரைவில் நிறைவடைய உள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாளர் மாநில காப்பீட்டு கழகம் ( Employees state corporation) செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள ESI அலுவலகத்தில் காலியாக உள்ள 56 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்கள் விவரம், கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: இசிஜி டெக்னிஷியன் (06 பணியிடங்கள்), ஒ.டி அஸ்சிஸ்டண்ட் (15), பார்மாசிஸ்ட்(அலோபதி) -10, பார்மாசிஸ்ட் (ஆயுர்வேதா) -04, ரேடியோகிராபர் (02), ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலாஜிஸ்ட் (02 பணியிடங்கள்) என மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இசிஜி டெக்னிஷியன் பணியிடத்திற்கு 2 ஆண்டு டிப்ளமோ பிரிவில் இசிஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஜூனியர் ரேடியோகிராபர் பணிக்கு 2 ஆண்டு டிப்ளமோ ரோடியோகிராபி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர்மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் விண்ணப்பத்தாரர்கள் 12ம் வகுப்பை சயின்ஸ் பாடங்களுடன் முடித்து டிப்ளமோ மெடிக்கல் லேபராட்டரி டெக்னாலஜிஸ்ட் படித்து இருக்க வேண்டும்.
ஓடி அசிஸ்டென்ட் பணிக்கு 10, பிளஸ்2 படிப்புடன் ஓராண்டு ஆபரேஷன் தியேட்டர் பணியில் அனுபவம் கொண்டிருப்பதோடு பார்மசிஸ்ட்(அலோபதி) பணிக்கு பார்மஸி பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ பார்மஸி முடித்திருக்க வேண்டும். பார்மசிஸ்ட்(ஆயுர்வேதம்) 12ம் வகுப்பு பாஸாகி பி.பார்ம் படிப்பில் ஆயுர்வேத படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ ஆயுர்வேத பார்முஸி படிப்பை முடித்து 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ரேடியோகிராபர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ ரேடியோகிராபி படிப்பை முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். ஓடி அஸ்சிஸ்டண்ட் பணிக்கு மட்டும் 32 அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு:
இசிஜி டெக்னிஷியன்: ரூ.25,500 - 81,100
ஜூனியர் ரேடியோகிராபர்- ரூ.21,700 - 69,100
ஓடி அஸ்சிஸ்டண்ட்- ரூ.21,700 - 69,100
பார்மாசிஸ்ட் (ஆயுர்வேதா) உள்ளிட்ட இதர பணியிடங்களுக்கு ரூ.29,200 - 92,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி / எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் பிறகு அறிவிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30.10.2023 ஆகும். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.esic.gov.in/attachments/recruitmentfile/c23c25a3dad3da105d441ef8844b022d.pdf கிளிக் செய்யவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications