செம.! அரசு வேலை.. அதுவும் சென்னையிலேயே.. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகத்தில், அலுவலக உதவியாளர் மற்றும் கவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் கவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6 அலுவலக உதவியாளர் மற்றும் 2 காவலர் என மொத்தம் 8 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், காவலர் பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். வயது உச்ச வரம்பு 01.07.2023 படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவினர் - 34 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதி திராவிட/ பழங்குடியின வகுப்பினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் அரசு வேலை நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அந்த படிவத்தை முழுவதுமாக நிரப்பி, தபால் வழியாகவோ அல்லது நேரிலோ கொடுக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் (நிர்வாகம்),
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் (வேலைவாய்ப்பு பிரிவு),
எண்,42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை600 032
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 29.08.2023 ஆகும்.












Click it and Unblock the Notifications