IT JOBS: மதுரையில் ஐடி வேலை ரெடி.. HCL தரும் சூப்பர் சான்ஸ்.. டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Freshers - Process Associate/ Customer Service Reporesentative - Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

hcl-hiring-for-fresher-process-associate-customer-service-representative-roles-in-madurai

இந்த பணிக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருந்தால் மட்டுமே போதும். பாட வாரியாக பார்த்தால் பிபிஏ, பிகாம், எம்பிஏ, எம்ஏ, எம்கார் உள்ளிட்ட படிப்புகளை 2024 மற்றும் 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கூறிய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அனுபவம் கொண்டவர்கள் என்றால் அதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் அதில் குறிப்பிட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு ரெஸ்யூம் விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். மதுரையில் HCL Tech, Elcot IT Park, Airport - mattuthavani Rign Road, Ilandaikulam, Madurai, Tamil Nadu 625 020 என்ற முகவரியில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+