உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியுடன் இணைந்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி களமிறங்க ரெடியாகியிருக்கிறது. இதெல்லாம் ஓகேதான்! ஆனால், காங்கிரஸ் கேட்கும் சீட் எண்ணிக்கையை பார்த்தால்.. உ.பியிலும் ராகுல் காந்தி குட்டையை குழப்புகிறாரோ? என்று கேள்வி எழுகிறது.

உ.பியில் மொத்தம் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 403. இதற்கு முன்னர் 2022 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி தனித்தனியாக போட்டியிட்டிருந்தன. ஆனால், ரெண்டு கட்சிகளும் படுதோல்வியடைந்தன. காங்கிரஸுக்கு வெறும் 2 தொகுதிகள்தான் கிடைத்தன. சமாஜ்வாதி 111 தொகுதிகள் கிடைத்தன.

Rahul Gandhi

2017 தேர்தல் தந்த பாடம்

இப்படி இருக்கையில் தற்போது 2027 சட்டமன்ற தேர்தலில், கூட்டணியில் 181 இடங்களை காங்கிரஸ் கேட்டிருப்பதாக அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். கடந்த தேர்தலில் வெறும் 2.39% வாக்குகள் வாங்கிய கட்சிக்கு 181 சீட்டுகளை தூக்கி கொடுக்க வேண்டுமா? என்று சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கொந்தளித்துள்னர். 2017 சட்டமன்ற தேர்தலில் என்ன நடந்தது? என்பதை சமாஜ்வாதி நிர்வாகிகள் நினைவுப்படுத்தி.. காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

181 கேட்குதா?

2017ல் காங்கிரஸும், சமாஜ்வாதியும் இணைந்து போட்டியிட்டன. காங்கிரஸுக்கு 103 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் வெறும் 7 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. சமாஜ்வாதி 37 இடங்களில் ஜெயித்தது. இப்படி இருக்கையில் 181 தொகுதிகளை காங்கிரஸ் எந்த நம்பிக்கையில் கேட்கிறது? 181 தொகுதிகளில் அக்கட்சிக்கு பூத் லெவலில் முதலில் ஆட்கள் இருக்கிறார்களா? வேலை செய்ய கூட ஆட்கள் இல்லாத கட்சிக்கு 181 கேட்குதா? ரொம்ப கெஞ்சி கேட்டால் வேண்டுமானால் 75 தொகுதிகளை கொடுக்கலாம்.

அதைத்தாண்டி கொடுத்தல்.. மீதமுள்ள தொகுதிகளில் நிச்சம் பாஜகதான் வெற்றிப்பெறும். இது நம் விரல்களை வைத்து.. நம்முடைய கண்களை நாமே குத்திக்கொள்வதற்கு சமம்.

பீகார், தமிழ்நாடு தேர்தலில் காங்கிரஸ்

2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் என்ன நடந்தது? அடம்பிடித்து 61 தொகுதிகளை கேட்டு வாங்கியது. இதில் வெறும் 6 இடங்களில் மட்டும்தான் கட்சி ஜெயித்திருந்தது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்ன நடந்தது? 28 தொகுதிகளை கேட்டு வாங்கி.. வெறும் 5 இடங்களில் மட்டும்தான் ஜெயித்தது. இதுதான் காங்கிரஸின் பலம். அவர்கள் இஷ்டத்திற்கு கேட்பார்கள்! அதை அப்படியே கொடுத்துவிட முடியுமா என்ன? என்று சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் சூடாகியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலை, உ.பியில் சமாஜ்வாதியுடன் இணைந்து எதிர்கொண்டிருந்தது. அப்போது 16 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 9.53% ஆக உயர்ந்தது. இந்த நம்பிக்கையில்தான் கூடுதல் இடங்களை கேட்கிறது.

PDA பார்முலா

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, புத்திசாலித்தனமாக தேர்தலை எதிர்கொண்டிருந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அசாதுதீன் ஓவைசியின் கட்சிகள் இருந்தாலும் கூட.. PDA எனும் பார்முலாவை சமாஜ்வாதி பின்பற்றியது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்சாரம் மட்டுமல்லாது.. தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது என அனைத்திலும் இந்த பிரதிநிதித்துவம் கடைபிடிக்கப்பட்டது. எனவேதான் வெற்றி சாத்தியமாகியது.

ஆனால், 181 தொகுதிகள் காங்கிரஸுக்கு கொடுக்கப்படுகிறது எனில், இந்த தொகுதிகளில் காங்கிரஸ் PDA பார்முலாவை பின்பற்றுமா? என்று உறுதியாக சொல்ல முடியாது. எனவே ராகுல் காந்தியின் கேமை வீழ்த்தி, 75 தொகுதிக்குள் காங்கிரஸை சுருக்கினால் சமாஜ்வாதிக்கு நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+