Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிகிரி மட்டுமே போதும்.. அனுபவம் தேவையில்லை.. சென்னை HCL-லில் பணி.. ஜன., 22 -23ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிகிரி முடித்து முன்அனுபவம் இல்லாதவர்களை பணியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 22 (நாளை) மற்றும் ஜனவரி 23 (நாளை மறுநாள்) சென்னையில் நடைபெற உள்ள இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Customer Service Representative - International Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

hcl-hiring-for-freshers-customer-service-representative-and-interview-to-be-held-on-january-22-and

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு படிப்பில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு என்றால் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இது Freshersக்கான பணியாகும். இதனால் பணி அனுபவம் தேவையில்லை.

2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் கடைசி செமஸ்டர் மதிப்பெண் சான்றுடன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேவேளையில் இன்ஜினியரிங், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு இண்டர்வியூவில் அனுமதியில்லை. பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும்.

அதுமட்டுமின்றி பணி என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி, பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இதற்கான இண்டர்வியூ ஜனவரி 22 (நாளை) மற்றும் ஜனவரி 23 (நாளை மறுநாள்) என 2 நாட்கள் சென்னையில் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

இண்டர்வியூ என்பது Tower 4, HCL Technologies, Elcot Sez, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 30 கிலோமீட்டர் தூரம் வரை Cab வசதி உள்ளது. இது பெண் ஊழியர்களுக்கு இலவசமாகும். மேலும் பணியாளர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மிஸ் செய்யாமல் நாளை, நாளை மறுநாள் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+