அனுபவம் வேண்டாம்.. Arts and Science படித்தோருக்கு ஜாக்பாட்.. சென்னை HCL-ல் அக்.,27 ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Process Associate/Associate (Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் 2024 அல்லது 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாறாக பிஇ, பிடெக், எம்சிஏ அல்லது பிற தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் முன்அனுபவம் இல்லாவிட்டாலும் கூட விண்ணப்பம் செய்யலாம். மாறாக 4 மாதம் முதல் ஓராண்டு வரை இன்டர்நேஷனல் பிபிஓ-வில் வாய்ஸ் புராசஸ் அல்லது இ-மெயில் சாட் உள்ளிட்டவற்றில் பணியாற்றியவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
பணி அனுபவம் கொண்டவர்கள் என்றால் அவர்கள் Relieving/Resignation-யை பணியாற்றிய நிறுவனம் ஏற்றுக்கொண்டதற்கான கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும். ரிலிவிங் கடிதம் இல்லாவிட்டால் பணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்நல்லூர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகம் சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். PickUp and Drop வசதி செய்து தரப்படும். பணி என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது அக்டோபர் 27 (நாளை மறுநாள்) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் உரிய நேரத்தில் HCL Tech, Tower 4, Elcot Sez, Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications