HCL ஐடி வேலைவாய்ப்பு.. 2023, 2024ல் டிகிரி முடித்தோர் விண்ணப்பிக்கலாம்.. சென்னையில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 2023, 2024ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் பைத்தான் டெவலப்பர் (Python Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு என்ட்ரி லெவல் பணியாகும். இதனால் பைத்தான் டெவலப்பர் என்று கூறியிருந்தாலும் ‛டெவலப்பர்' பிரிவில் பணி நியமனம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2023 மற்றும் 2024ம் ஆண்டில் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி 6 மாத இன்டஸ்ட்ரி அனுபவம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கான சம்பளம் குறித்து கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தற்போது பல ஐடி நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் படிப்பை முடித்து ஐடி துறையில் கால்பதிக்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னை அல்லது பெங்களூரில் நடைபெறும். தகுதி, திறமையை பொறுத்து எச்சிஎல் நிறுவனம் சார்பில் விண்ணப்பத்தாரர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள். தொலைபேசி அல்லது இ-மெயில் மூலம் அழைப்பு வரலாம்.
அப்போது இண்டர்வியூவுக்காக தேதி, நேரம், முகவரி அனுப்பி வைக்கப்படும். இண்டர்வியூ Hackerrank மற்றும் Hackathon முறையில் Face To Face-யில் இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications