3 பிரிவுகளில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 3 இடங்களில் பணி.. நவ.,15ல் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது 3 பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (React/Angular), ஜாவாவித் கிளவுட் டெவலப்பர் (AWS/GCP) மற்றும் ஜாவா பேக்எண்ட் டெவலப்பர் என 3 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி ஜாவா, ஸ்பிரிங்புட், மைக்ரோசர்வீசஸ், ஆங்குலர்/ரியாக்ட், ஏடபிள்யூஎஸ்/ஜிசிபி உள்ளிட்ட ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஹைதராபாத்தில் நவம்பர் 15 நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Plot H-01BSY No 30, 34, 35, 38, Avinah Hitech City 2 Society, Gachibowli Village, Serillimgampally Mandal, Ranga Reddy District, Hyderabad, Telangana 500 081 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவுக்கு செல்வோர் 2 ரெஸ்யூம், பென், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அரசு அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications