Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT JOBS: வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரிவில் காலியிடங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நிறுவனமான ஹனிவெல் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஹைபிரிட் மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.

ஹனிவெல் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் I பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இளநிலை அல்லது முதுநிலை கல்லூரி படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் அல்லது எம்சிஏ படித்திருக்க வேண்டும்.

honeywell-hiring-for-software-engineer-roles-in-hyderabad

சம்பந்தப்பட்ட பிரிவில் 0- 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் அனுபவம் இல்லாதவர்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.

அதன்படி, Core Java, HTML, ஜாவா புரோகிராமிங் லேங்குவேஜ், ஆரக்கள் டேட்டாபேஸ், பைத்தான் புரோகிராமிங் லேங்குவேஜ், வெப் சர்வீஸ் உள்ளிட்டவை ஸ்கில்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏரோஸ்பேஸ் டொமைன் அனுபவம், DO - 200B பற்றி தெரிந்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மல்டிபிள் டாஸ்க்கிங் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

அதேபோல் இது ஒரு ஹைபிரிட் வகை பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாம் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஷிப்ட் என்பது பகல் வேளையில் தான் இருக்கும். ஹைதராபாத்தில் இந்த நிறுவனம் Lot 115 (P), Nanakramguda Village, Hyderabad, Telangana, 500 019 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+