ஏராளமான காலியிடங்கள்.. சென்னை - கோவை உள்பட 21 இடங்களில் பணி.. IBM தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம்-யில் அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்பட 21 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
ஐபிஎம் (IBM) ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு என்ட்ரி லெவல் பணியாகும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். பிஇ, பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதனை சார்ந்த துணை படிப்புகள் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஏஐஎம்எல், டிஎஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், சிஎஸ்பிஎஸ், ஐஓடி, ரோபோடிக்ஸ், ஏஐ, சைபர் செக்யூரிட்டி, இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருக்க கூடாது. 6 சிஜிபிஏ/60% வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல், விண்ணப்பம் செய்வோருக்கு புரோகிராமிங் லேங்குவேஜ்களான Java, C++, Pyhon, Node.Js உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், interpersonal Skills இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், மைசூர், அகமதாபாத், சண்டிகர், திருவனந்தபுரம், லக்னோ, மங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, குர்கிராம், நொய்டா, விசாகப்பட்டினம், நவி மும்பை, பெங்களூர், கொச்சி, ஜெய்ப்பூர், புவனேஸ்வர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விவரம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறித்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications