மாதஊதியம் ரூ.30,000 டூ ரூ.40,000 .. 4வது ஆண்டில் கையில் ரூ.10 லட்சம்! விமானப்படையில் சூப்பர் வேலை
சென்னை: இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 3,500 அக்னிவீரர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகள் உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில் தான் இந்த முப்படைகளில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த படைகளுக்கு தனித்தனியே ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது விமான படைக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 3,500 அக்னி வீரர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிளஸ் 2வை கணிதம், இயற்பியல், ஆங்கிலம் உள்ளிட்ட படிப்புகளுடன் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டெஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் 10ம்வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2வுக்கு நிகரான படிப்பை முடித்து 2 ஆண்டு Vocational Course முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்பணப்ம் செய்வோர் 21 வயதுக்குள்இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் விண்ணப்பம் செய்வோர் 2004 ஜனவரி 2ம் தேதி முதல் 2007 ஜூலை 2ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதசம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கும் முதல் ஆண்டு ரூ.30,000 (கையில் 21,000 + பிடித்தம் 9,000), 2வது ஆண்டு ரூ.33,000 (23,100 + 9,900), 3ம் ஆண்டு ரூ.36,500 (25,500 + 10,950), 4ம் ஆண்டு ரூ.40,000 (28,000 + 12,000) வழங்கப்படும். இது அக்னிபாத் திட்டம் என்பதால் 4 ஆண்டு மட்டுமே ஒருவர் பணி செய்ய முடியும். 4 ஆண்டு முடிவில் வீரர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகை வட்டியுடன் ரூ.10.04 லட்சம் சேவை நிதியாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய பிப்ரவரி மாதம் 6ம் தேதி இரவு 11 மணி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.550 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு, உடற்பகுதி தேர்வு, அடாப்டபிலிட்டி தேர்வு, மருத்துவ தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications