ஜெய்ஹிந்த்.. நாட்டைக் காக்க ஒரு அரிய வாய்ப்பு! இந்திய ராணுவத்தில் இணைய நீங்க தயாரா? இதை பண்ணுங்க!
கோவை: இந்திய ராணுவத்திற்கு தற்போது அக்னிவீர் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகெங்கும் உள்ள நாடுகள் பாதுகாப்புக்காக அதிக நிதியை செலவிட்டு வருகின்றன இந்தியாவிலும் ராணுவத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியா ராணுவத்தில் தற்போது அக்னி வீர் என்ற திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி வரை அக்னிவீர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," தமிழ்நாட்டில் கடலூர். வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை. திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள, புதுவை யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் தங்கள் விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தின் மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
வரும் ஏப்ரல் 25ம் தேதி www.joinindianarmy.nic.in ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் பொது பணியாளர், அக்னி வீர் தொழில் நுட்பம், அக்னிவீர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி (10ம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் தொழிலாளி (8ம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில், இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனைக்கான நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளிலிருந்து 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்சிசி, ஐடிஐ, டிப்ளோமா முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும்.
முதலில் ஆன்லைன் பொதுத் தேர்வு நடைபெறும். அதன்பின்னர் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும். ஆட்சேர்ப்பு முறையே முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது. மோசடி செய்யும் ஏஜென்ட்டுகளிடம் ஏமாற வேண்டாம்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு மார்ச் 12. 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 10, 2025 அன்று முடிவடையும். ஜூன் 2025-ல் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும். அவற்றைப்பெற விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தையும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலையும் தொடர்ந்து பார்த்துவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) (அஞ்சல் குறியீடு- 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications