For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெடியா? கைநிறைய சம்பளம்.. டிகிரி முடித்தாலே போதும்.. அழைக்கும் இந்திய வனப்பணி.. சூப்பர் வாய்ப்பு!

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய வனப்பணிக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: யுபிஎஸ்சி எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய வனப்பணி தேர்வு (Indian Forest Service Exam) அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து வேலையை பெற முடியும்.

யுபிஎஸ்சி (UPSC)எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய வனப்பணி தேர்வு முறையில் பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இடங்கள், வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க! விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

Indian Forest Service Exam மூலம் 150 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகம் நபர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். தமிழ்நாட்டின் சென்னையிலும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

குறைந்தபட்ச வயதாக 21 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயது என்பது 32 ஆக உள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திளனாளிகளுக்கு அதிகபட்சமாக 15 வயது வரையும் தளர்வு அளிக்கப்பட உள்ளது.

கல்வி தகுதி -மாத சம்பளம் என்ன?

கல்வி தகுதி -மாத சம்பளம் என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு படிப்பில் இளங்கலையில் Animal Husbandry and Veterinary Science Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெறவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

விருப்பம் உள்ளவர்கள் https://www.upsconline.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பிப்ரவரி மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

English summary
The Indian Forest Service Exam has been announced by the Central Government Staff Selection Commission (UPSC). Degree completion candidates can apply for this job and get the job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X