ரெடியா? தேர்வு கிடையாது.. இந்திய கடற்படையில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு.. கேரளாவில் தான் பணி!
சென்னை: இந்திய கடற்படையில் எஸ்எஸ்சி ஐடி எக்ஸிக்கியூட்டிவ் பிரிவில் சப் லெப்டினென்ட் ரேங்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, என்ஜினீயரிங் உள்ளிட்ட தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்தால் தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணியை பெறலாம்.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கேரளா மாநிலம் எழிமலாவில் எஸ்எஸ்சி அடிப்படையில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிகள் சப் லெப்டினென்ட் ரேங்கில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணி தொடர்பான அறிவிப்பின் அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
Short Service Commission (SSC) in Information Technology (Executive Branch) என்ற பிரிவில் மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் பணியில் வைத்து கொள்ளப்படுவார்கள். அதன்பிறகு 2+2 என மொத்தம் 4 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்யப்பட வாய்ப்பு. இந்த பணிக்கு திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் என இருவரும் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் கேரளா எழிமலாவில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10 மற்றும் 12ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட கம்யூட்டர் சார்ந்த பிரிவில் எம்எஸ்சி, பிடெக், எம்டெக், எம்சிஏ, பிஎஸ்சி உள்ளிட்ட டிகிரியை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பம் செய்பவர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அதன்படி 1998 ஜூலை 2ம் தேதி முதல் 2004 ஜனவரி 1ம் தேதிக்குள் பிறந்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். பணி தொடர்பான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுபற்றிய தகவல்கள் பணிக்கு சேரும்போது கூற வாய்ப்புள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 5ம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். இவ்வாறு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications