ஜிப்மரில் 433 நர்சிங் அதிகாரிகள் காலிப்பணியிடம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஈஸியா விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) 433 நர்சிங் அதிகாரி காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இதில் பணிபுரிய விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜிப்மர் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளின்படி அதற்கென வழங்கப்பட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளில் அரசின் தளர்வுகள் பொருந்தும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறிவிப்பு
புதுச்சேரியில் கடந்த 1823ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனை இந்தியாவில் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த மருத்துவமனை மத்திய அரசின் நிதியுதவியின் மூலம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இம்மருத்துவமனையில் பணிபுரிய நர்சிங் அதிகாரிகள் தேவையென்றும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மொத்தம் 433 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நிபந்தனைகள்
இதற்கு வரும் டிசம்பர் 1ம் தேதி வரை jipmer.edu.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC,ST) ஆகியோர் ரூ.1,300 செலுத்தினால் போதுமானது. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிப்பவர்களின் வயது 18-35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் இந்திய நர்சிஸ் கவுன்சில் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்லூரியில் B.Sc Nusrsing அல்லது டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு
மட்டுமல்லாது நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட ஏதேனும் ஒரு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு செய்முறை CBT தேர்வு மற்றும் திறன் சோதனை தேர்வு ஆகியவை நடத்தப்படும். இறுதியாக எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?
கேள்விகளை பொறுத்த அளவில் பொது அறிவு, பொது நுண்ணறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களிலிருந்து 30% கேள்விகளும், நர்சிங் பாடப்பிரிவிலிருந்து 70% கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். இவையனைத்தையும் எழுதி முடிக்க 1.30 மணிநேரம் வழங்கப்படும். தேர்வாகும் ஊழியர்கள் மாதம் ரூ.44,900 பெறுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்குறிப்பிட்டதைப்போல jipmer.edu.in என்கிற இணையதளத்தில் நுழைந்து, ‘Announcements' - ‘Jobs' எனும் Option-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில், Recruitment to the post of Nursing Officer, JIPMER-Puducherry இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்ப தகவல்களை நிரப்ப வேண்டும். இறுதியாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications