HR ஆக விருப்பமா? அனுபவம் தேவையில்லை.. சென்னை போரூர் DLF ஐடி பார்க்கில் வேலை ரெடி
சென்னை: சென்னை போரூர் டிஎல்எஃப் ஐடி பார்க்கில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் HR Recruiters பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அனுபவம் உள்ளவர்களும், அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தற்போது ஐடி துறையில் கால்பதிக்க வேண்டும் என்பது பலருக்கும் பெரிய கனவாக உள்ளது. பெண்களை எடுத்து கொண்டால் பலருக்கும் எச்ஆர் பணி மீது அதிக ஈடுபாடு உள்ளது.

இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் எச்ஆர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது HR Recruiters பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
அதேபோல் ரெக்ரூட்மென்ட் சைக்கிள் பற்றி அறிந்து இருக்க வேண்டும். ஸ்ட்ராங்க் சோர்சிங் மற்றும் கோஆடிநேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். எம்எஸ் ஆபிசில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்களும், அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அனுபவம் என்றால் ஓராண்டு வரை எச்ஆர் ரெக்ரூட்மென்ட் அனுபவம் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். முதற்கட்டமாக சென்னை போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். அதேவேளையில் ரிலோகேஷன் தயாராக இருக்கவும் வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முழு விவரங்களை அறிந்து விண்ணப்பம் செய்யலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதில் உள்ள செல்போன் எண், வாட்ஸ்அப் எண், இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications