மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விவரம் உள்ளே
டெல்லி: 'gail recruitment 2021'. இந்திய அரசு நிறுவமான கெயில் நிறுவனத்தில் என்ஜினியர்கள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தலைமையகமாகக் கொண்டு இயற்கை எரிவளியை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனம் கெயில். : இயற்கை எரிவளியையும் நீர்மநிலை பெட்ரோலிய வளி (LPG)யையும் எடுத்துச் செல்லும் சேவைகள், இயற்கை எரிவளி வணிகம், பெட்ரோகெமிக்கல்ஸ், எல்பிஜியும் நீர்ம ஐதரோகார்பன்களும், கெயில்டெல் ஆகிய ஆறு பிரிவுகளை கொண்டது கெயில் நிறுவனம்..

இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 220 அதிகாரி பணியிடங்களுக்கு பிஇ படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
பணி தரும் நிறுவனம்: கெயில்
என்ன வேலைகள்: அதிகாரி (மானேஜர், என்ஜினீயர்)
மொத்த பணியிடங்கள்: 220
வயது வரம்பு: மானேஜர் (34 வயதிற்குள்), என்ஜினீயர் (28 வயதிற்குள்), இதர பணிகள் (35 வயதிற்குள்)
கல்வி தகுதி என்ன: பதவிகளுக்கு ஏற்ப இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு
தேர்வு முறை எப்ப : ஆன்லைன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-8-2021.
விரிவான விவரங்களுக்கு: https://careers.gail.co.in/ என்ற இணையதளம் மூலம் அறியலாம். அல்லது செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் பார்க்கலாம்












Click it and Unblock the Notifications