பிஎஸ்சி, ஐடிஐ, பிஇ பட்டதாரிகளா? மத்திய அரசு நிறுவனத்தில் காத்திருக்கிறது வேலை.. கை நிறைய சம்பளம்
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் (Central Power Research Institute) பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
மத்திய மின்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் தற்போது பிஎஸ்சி, ஐடிஐ, பிஇ பட்டதாரிகளை கொண்டு பல்வேறு பணியிடங்களை நிரப்ப விளம்பரம் மூலமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் படித்து அறிந்து பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இந்த அறிவிப்பின் முக்கிய விபரம் வருமாறு:

என்னென்ன பணிகள்?
சென்ட்ரல் பவர் ரிசர்ஸ் இன்ஸ்டிடியூட்டில் Engineer officer - Grade I பணிக்கு 20 காலியிடங்கள் உள்ளன. Scientific/Engineering Assistant பணிக்கு 7 காலியிடங்கள் இருக்கின்றன. Technical Grade-I பணிக்கு 15 காலியிடங்களும், Assistant Grade II பணிக்கு 16 காலியிடங்களும் இருக்கின்றன. MTS Grade I (watchman) பணிக்கு 7 காலியிடங்களும் உள்ளன.

சம்பளம் எவ்வளவு?
Engineer officer - Grade I பணிக்கு மாத சம்பளம் ரூ.44,900 வழங்கப்படும். Scientific/Engineering Assistant பணிக்கு ரூ.35,400 மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Technical Grade-I பணிக்கு மாத சம்பளம் ரூ.19,900 வழங்கப்படும். Assistant Grade II பணிக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். MTS Grade I (watchman) பணிக்கு மாத சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும்.

கல்வித் தகுதி - வயது வரம்பு என்ன?
Engineer officer - Grade I பணிக்கு எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பிஇ., பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2021, 2022-இல் நடைபெற்ற GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். Scientific/Engineering Assistant பணியில் சேர பிஎஸ்சி வேதியியலில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடிதது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். Technical Grade-I பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு 28-க்குள் இருக்க வேண்டும். Assistant Grade II பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் அக்கவுண்டென்ட் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். MTS Grade I (watchman) பணியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று முப்படையில் ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 45-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பக் கட்டணம்
மேற்கண்ட பணியிடங்களுக்கு www.cpri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க 21-11-2022 கடைசி தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். Engineer officer, Engineering Assistant பணிக்கு ரூ.1000, மற்ற பணிகளுக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications