நோ எக்ஸாம்.. ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்.. இந்து சமய அறநிலையத்துறையில் செம ஜாப்.. மிஸ் பண்ணிடாதீங்க
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டப்பட்டு நிரப்பபடுகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள டிரைவர், இரவு காவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: டிரைவர் (01 பணியிடம்), இரவு காவலர் (01), அலுவலக உதவியாளர் ( 03) என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இன சுழற்சி ஒதுக்கீடு முறையில் இந்த பணியிடங்கள் நிரப்படும். இது பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பை பொறுத்தவரை பொது பிரிவினர் 18 - 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். பிசி/ ஒபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் உச்சப்பட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வி தகுதி & சம்பளம்: டிரைவர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்.எம்.வி லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை மதம் ரூ.19,500 - 62,000 - வரை வழங்கப்படும். இரவுக் காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியின்மையோடு நன்றாக எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.15,700 - 50,000-வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். https://hrce.tn.gov.in இன்ற இணைய முகவரியில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்துடன் கல்வி தகுதிக்கான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சுயவிவரம் இட்டு ரூ.25க்கான தபால் தலை ஒட்டிய உறையுடன் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
35/1A, மேல ரத வீதி,
தூத்துக்குடி- 628002
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. தேர்வு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications