Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.11,600 டூ ரூ.65,500 வரை சம்பளம்.. அறநிலையத்துறையில் அசத்தலான வேலை! நாமக்கல்லில் பணி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நரசிம்மசுவாமி கோவிலில் காலியாக உள்ள வெவ்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு, டிகிரி, பிஇ, பிடெக், மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.65,500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது.

 Namakkal Narasimaswamy temple TNHRCE recruitment 2023 for various post including tamil teacher

அந்த வகையில் தற்போது நாமக்கல்லில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலில் 6 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தமிழ் ஆசிரியர்: நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் தமிழ் ஆசிரியர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு தமிழில் முதுகலைப்பட்டம், பிடி அல்லது பிடெ் பட்டம் முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாதசம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.20,600 முதல் அதிகபட்சமாக ரூ.65,500 வழங்கப்படும்.

ஆகம ஆசிரியர்: மேலும் ஆகம ஆசிரியர் பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு வேத ஆகம பாடசாலையில் (வைணவம்-வைகானசம்) ஆசிரியராக 5 ஆண்டு குறையாமல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்து சமய அறநிலையத்துறையில் 5 ஆண்டுக்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்திருக்க வேண்டும். வைணவ ஆகமத்தில் தற்போதைய வேத ஆகம பாடசாலையில் 4 ஆண்டு படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மாதசம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.20,600 முதல் அதிகபட்சமாக ரூ.65,500 வழங்கப்படும்.

விடுதி காப்பாளர்: மேலும் விடுதி காப்பாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20,600 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.65,500 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்: அலுவலக உதவியாளர் பிரிவில் பள்ளிக்கு ஒருவர், விடுதிக்கு ஒருவர் என 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11,600 முதல் அதிகபட்சமாக ரூ.36,800 வரை வழங்கப்படுகிறது.

சமையலர்: சமையலர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் தூய்மை பணியாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த 2 பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமையலர் பணிக்கு உணவு சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். விண்ணப்பம் செய்வோர் இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். தமிழ் ஆசிரியர், ஆகம ஆசிரியர் வைணவ சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.namakkalanjaneyar.hrce.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு வரும் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ‛‛உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில், நாமக்கல் 637 001'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+