
சென்னையிலேயே பணி! ஊதியம் ரூ.14,000 முதல் ரூ.60,000.. அழைக்கும் அரசு வேலைவாய்ப்பு..யாருக்கு வாய்ப்பு?
சென்னை: தேசிய சுகாதார திட்டம் தமிழ்நாடு சார்பில் மாத சம்பளம் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் அரசு வேலையை பெற முடியும். இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள் முதல் பிடிஎஸ், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பித்து அரசு வேலையை தட்டித்தூக்க முடியும்.
தேசிய சுகாதார திட்டம் தமிழ்நாடு (National Health Mission Tamilnadu or NHM -TN) சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 10 ம் தேதிக்கு பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பிரியாணி.. விலங்கு வதை என அசைவ பிரியர்களை தடுக்க முடியுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பரபர வாதம்

காலியிடங்கள் எத்தனை?
தேசிய சுகாதார திட்டம் தமிழ்நாடு சார்பில் அசிஸ்டென்ட் 4, சாப்ட்வேர் ப்ரோகிராமர் 3, கன்சல்டன்ட் 8, பயோ மெடிக்கல் என்ஜினியர், சர்வர் அட்மின், அக்கவுண்டனட், ஐடி கோஆடினேட்டர், ஸ்டேடிஸ்டிக்கல் அசிஸ்டென்ட் தலா 1, டேட்டா ஆபரேட்டர் பணிக்கு 2 என மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக கல்விதகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் அசிஸ்டென்ட் பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். கன்சல்டன்ட் பணிக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயோ மெடிக்கல் என்ஜினீயர் பணிக்கு பயோ மெடிக்கல் பிரிவில் என்ஜினியரிங் அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். சர்வர் அட்மினிஸ்ட்ரேட்டிவ், சாப்ட்வேர் ப்ரோகிராமர் பணிக்கு பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி படிப்பை முடித்திருக்க வேண்டும். அக்கவுண்டன்ட் பணிக்கு பிகாம், பிஎஸ்சி ஸ்டேட்டிஸ்டிக்ஸ், அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். ஐடி கோஆர்டினேட்டர் பணிக்கு பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி பயோ மெடிக்கல் என்ஜினியரிங் அல்லது எம்எஸ்சியில் எம்எல்டி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஸ்டேடிஸ்டிக்ஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பிரிவில் டிகிரி அல்லது வேறு பிரிவில் பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோருக்கு தனித்தனியே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்சல்டன்ட், ஐடி கோஆர்டினேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?
கன்சல்டன்ட் பணிக்கு ரூ.47,500 முதல் ரூ.60 ஆயிரம் வரை கிடைக்கும். சர்வர் அட்மினிஸ்ட்ரேட்டர் பணிக்கு ரூ.40 ஆயிரம், ஸ்டேட்டிஸ்ட்டிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.28 ஆயிரம், சாப்ட்வேர் ப்ரோகிராமர் பணிக்கு ரூ.23 ஆயிரம், ஐடி கோஆர்டினேட்டர் பணிக்கு ரூ.21 ஆயிரம், பயோமெடிக்கல் என்ஜினியர், அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ரூ.15,500, அக்கவுண்டன்ட் பணிக்கு ரூ.14 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணம் என எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் nhm.tn.gov.in எனும் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 10ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் Click Here