மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 1,101 பணியிடங்கள்.. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 1,101 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனம். கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த நிறுவனம் மத்திய கனிம வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நாட்டில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி யும் உள்ளது.

neyveli-lignite-corporation-recruitment-2025-1-101-apprentice-vacancies-iti-and-diploma-holders-c

இந்த நிறுவனத்தில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 1,101 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்;

ஃபிட்டர் - 124 பதவிகள்
டர்னர் - 45 பதவிகள்
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 120 பதவிகள்
எலக்ட்ரீஷியன் - 174 பதவிகள்
வயர்மேன் - 119 பதவிகள்
மெக்கானிக் (டீசல்) - 05 பதவிகள்
பிளம்பர் - 05 பதவிகள்
ஸ்டெனோகிராஃபர் - 20 பதவிகள்
வெல்டர் - 125 பதவிகள்
COPA (கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்) - 30 பதவிகள்
குளிர்சாதனம் மற்றும் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் - 10 பதவிகள்
மோல்டர் - 05 பதவிகள்
தச்சர் - 05 பதவிகள்

பட்டதாரி பயிற்சி

மருந்தகம் (பட்டதாரி) - 03 பதவிகள்
வணிகம் - 68 பதவிகள்
கணினி அறிவியல் - 89 பதவிகள்
கணினி விண்ணப்பம் - 49 பதவிகள்
வணிக நிர்வாகம் - 47 பதவிகள்
புவியியல் - 12 பதவிகள்
வேதியியல் - 11 பதவிகள்
நர்சிங் - 34 பதவிகள்
மைக்ரோ பயாலஜி - 01 பதவி

கல்வி தகுதி:

ஐடிஐ பிரிவு காலிப்பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே போல டிகிரி பிரிவிலும் சம்பந்தப்பட்ட டிகிரியை மேஜர் ஆக முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்,

வயது வரம்பு

18 வயது பூர்த்தியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஐடிஐ பிரிவுக்கு 10,419 ரூபாயும் டிகிரி பயிற்சி பணியிடத்திற்கு ரூ.12,524 ம் சம்பளமாக வழங்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி கடைசி நாளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+