10 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. சிவகங்கையில் செம ஜாப்.. அப்ளை பண்ண ரெடியா!
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் நேஷனல் ஹெல்த் சொசைட்டி திட்டத்தின் கீழ் பல் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் (NHM) அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 5 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல் மருத்துவ அலுவலர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பதவிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி என்ன?: பல் மருத்துவர் பணியிடத்திற்கு பிடிஎஸ் முடித்து இருக்க வேண்டும். உதவியாளர் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.
சம்பளம் எவ்வளவு?: இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பல் மருத்துவர் பணியிடத்திற்கு ரூ.34 ஆயிரம் சம்பளமும், உதவியாளர் பணியிடத்திற்கு ரூ.13,800 சம்பளமாக வழங்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தபால் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதரார்கள் வரும் 31.07.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை.தொலை பேசி எண் 04575-240524.
விண்ணப்ப படிவத்தை https://sivaganga.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரிக்கு சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன்லோடு செய்த விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரி தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். அதாவது, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள், நன்னடத்தை சான்றிதழ், தடையில்லா சான்று, அனுபவ சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்று முன்னுரிமை பெறுவதற்கான வேறு ஏதேனும் சான்றிதழ்கள் இருந்தால் அவற்றின் நகலை சுய சான்று அளித்து இணைத்து அனுப்ப வேண்டும்.
காலிப்பணியிடங்கள்: பல் மருத்துவர் பணியிடங்கள் 3-ம், பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் 2 ம் என மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications