நீலகிரி அருவங்காடு தொழிற்சாலையில் வேலை.. இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
சென்னை: மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங், டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? சம்பளம் போன்ற விரிவான விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில், நாட்டில் ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான ஆயுதங்களுக்கான வெடிமருந்துகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.

40 பணியிடங்கள்
இந்த தொழிற்சாலையில் நிரந்தர பணியிடங்கள் மட்டுமின்றி அப்ரெண்டீஸ் பயிற்சிக்கும் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது 40 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* கெமிக்கல் இன்ஜினியரிங் - 14 பணியிடங்கள்
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 05
* எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 01
டிப்ளமோ அப்ரெண்டிஸ்கள்:
* கெமிக்கல் இன்ஜினியரிங் - 14 பணியிடங்கள்
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 04
* சிவில் இன்ஜினியரிங் - 01
* கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - 01 என மொத்தம் 40 பேர் தேவைப்படுகின்றனர்.
கல்வித் தகுதி:
துறை சார்ந்த பிரிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சமீபத்தில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். அதாவது 5 ஆண்டுகளுக்குள் பட்டம் முடித்து இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு:
* பட்டதாரி அப்ரெண்டீஸ் - ரூ.12,300
* டிப்ளமோ அப்ரெண்டீஸ் - ரூ.10,900
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் தங்களது சுயவிவரங்கள் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கள், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை கெஸட்டெட் அதிகாரிகளின் கையொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
"The Chief General Manager,
Cordite Factory Aruvankadu,
The Nilgiris, Tamil Nadu - 643202"
விண்ணப்பிக்க வரும் 17.04.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://ddpdoo.gov.in/en/main/vacancies?page=3
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications