ரூ.35,000 சம்பளத்தில் உச்சநீதிமன்றத்தில் வேலை! பட்டதாரிகளுக்கு அழைப்பு! விண்ணப்பம் செய்வது எப்படி?
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 210 காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து மாத சம்பளமாக ரூ.35,400 வரை பெறலாம்.

டெல்லியில் உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
உச்சநீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் உதவியாளர் (Junior Court Assistant) பணிக்கான 210 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.35,400 கிடைக்கும். பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு சலுகைகள் படி வயது தளர்வுகள் உண்டு. வயதானது 01.07.2022 தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sci.gov.in இணையதளம் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாக உள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் 10.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களை https://main.sci.gov.inrecruitment இணையதளத்தில் பார்க்க வேண்டும். உரிய அறிவிப்பை https://main.sci.gov.in/pdf/recruitment/17062022_130355.pdf கிளிக் செய்து தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications