ரூ.14 ஆயிரம் உதவித்தொகையுடன் மத்திய ரயில்வே நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பம் செய்வது எப்படி?
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் ரூ.14 ஆயிரம் உதவித்தொகையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம்(Rail India Technical And Economic Service Limited) உள்ளது.
இதில் தற்போது பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்த நிறுவனத்தின் சார்பில் மொத்தம் 91 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Graduate பிரிவில் என்ஜினீயரிங்கில் 57, நான் என்ஜினீரிங்கில் 15 என 72 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதுதவிர Diploma பிரிவில் 10, Trade பிரிவில் 9 என மொத்தம் 91 பணியிடங்கள் Apprentices முறையில் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
Graduate என்ஜினீயரிங் பிரிவில் பணியாற்ற விரும்புவோர் பிஇ, பிடெக் படிப்பையும், Graduate நான் என்ஜினீயரிங் பிரிவில் பணியாற்று விரும்புவோர் பிஏ, பிபிஏ, பிகாம் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். Diploma பிரிவினர் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். Trade பிரிவு விண்ணப்ததாரர்கள் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை எவ்வளவு?
Apprentices முறை என்பதால் ஒவ்வொரு பணிக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி Graduate பிரிவினருக்கு மாதம் ரூ.14 ஆயிரம், டிப்ளமோ பிரிவினருக்கு ரூ.12 ஆயிரம், Trade பிரிவினருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
என்ஜினீயரிங், பிடெக் முடித்தவர்கள் தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தில் (NATS) www.mhrdnats.gov.in இணையதளத்திலும், ஐடிஐ தேர்ச்சி அல்லது பட்டதாரி பிஏ, பிபிஏ/பி காம் தேர்ச்சி பெற்றவர்கள் தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) www.apprenticeshipindia.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு யூசர் ஐடி, பார்வேர்டு பயன்படுத்தி நுழைந்து ESTABLISHMENT REQUEST என்பதை கிளிக் செய்து Find Establishment என்பதை கிளிக் செய்து RITES Ltd என்பதை கிளிக் செய்து "Apply" செய்ய வேண்டும்.

கடைசி தேதி என்ன?
விண்ணப்பம் செய்ய 31.07.2022 என்பது கடைசிநாளாகும். இதனால் விண்ணப்பத்தாரர்கள் அதற்கு முன்பாக விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வ செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications