சவுத் இந்தியன் வங்கியில் வேலை.. மாதம் 60 ஆயிரம் சம்பளம்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்!
சென்னை: சவுத் இந்தியன் வங்கியில் (South Indian Bank) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் ஆபீசர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை காணலாம்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வங்கி சவுத் இந்தியன் வங்கி. நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுக்க பல்வேறு கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது சவுத் இந்தியன் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
எத்தனை பணியிடங்கள் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜூனியர் ஆபீசர் மற்றும் பிசினஸ் புரமோஷன் ஆபீசர் ஆகிய பதவிகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியினை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் எதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். மேலும் அனுபவம் கோரப்பட்டுள்ளது. NBFC-கள் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) அல்லது பிற நிதி நிறுவனங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை மார்ச் 2, 2026 அன்று தேதிப்படி, அதிகபட்ச வயது 30-க்குள் இருக்க வேண்டும். (பிப்ரவரி 1, 1996 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்). பட்டியல் இனத்தவர் (SC) மற்றும் பழங்குடியினத்தவர் (ST) விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்ந்தெடுக்கப்படும் ஜூனியர் ஆபீசர் / பிசினஸ் புரமோஷன் ஆபீஸர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7.56 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் http://www.southindianbank.bank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பிப்ரவரி 20, 2026 முதல் மார்ச் 2, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிப்பது அவசியம்.
விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ளவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னதாக, அழைப்புக் கடிதம் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://drive.google.com/file/d/1kPHIKdtKB9hlnMkeqOYeX31ujHgxmFRW/view?usp=sharing












Click it and Unblock the Notifications