TCS ஐடி நிறுவனத்தில் வேலை ரெடி.. பெங்களூர், ஹைதராபாத் உள்பட 3 இடங்களில் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர்(Java Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் என்சிஆர் பகுதிகளில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனும் டிசிஎஸ் அலுவலகம் உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது.

நடப்பு ஆண்டில் 12,000 பேரை உலகம் முழுவதும் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும்பல இடங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தான் விவாதத்தை கிளப்பியது.

tcs-hiring-for-java-software-engineer-role-in-bangalore-and-hyderabad

இது ஒருபுறம் இருக்க டிசிஎஸ் சார்பில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐடி நிறுவனத்தில் தற்போது ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா மற்றும் ஆங்குலர் உள்ளிட்டவற்றில் ஸ்கில்செட் இருக்க வேண்டும். அதேபோல் OOP's கான்செப்ட் உடன் ஆங்குலர் புரோகிராமிங் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப் நன்றாக தெரிந்திருக்க வேண்டு். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். NgRx-ல் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்குலர் அப்ளிகேஷன் அப்கிரேடிங்கில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அனலிட்டிக்கல் ஸ்கில் இருக்கு இருக்க வேண்டும். தேவையை புரிந்து கொண்டு பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கர்நாடகாவின் பெங்களூர், தெலுங்கானாவின் ஹைதராபாத் மற்றும் என்சிஆர் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிசிஎஸ் அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+