தமிழக அரசு வேலை.. தேர்வு கிடையாது.. 999 செவிலியர் பணியிடங்கள்.. 58 ஆயிரம் வரை சம்பளம்! செம சான்ஸ்
சென்னை: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) 999 நர்சிங் உதவியாளர் கிரேடு II பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தகுதியுடன் + அரசு கல்லூரிகளில் செவிலியர் உதவியாளர் படித்ததற்கான சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
டிஎன் எம்.ஆர்பி எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மருத்துவத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது நர்சிங் உதவியாளர் கிரேடு 2 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பணியிடங்கள் விவரம்:
* தமிழகம் முழுக்க மொத்தம் 999 செவிலியர் உதவியாளர் நிலை II பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது நிரந்தர அரசு வேலையாகும்.
* பொதுப் பிரிவினருக்கு 308 பணியிடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 264 பணியிடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) 35 பணியிடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 200 பணியிடங்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 152, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்) 30 மற்றும் பழங்குடியினருக்கு 10 என இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
* விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மேலும், மாநில அரசின் எந்தவொரு மருத்துவ நிறுவனத்திலும் செவிலியர் உதவியாளர் பயிற்சி course-ஐ வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருப்பது கட்டாயம் ஆகும்.
வயது வரம்பு
* விண்ணப்பதாரர்கள் குறைந்தப்பட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 34 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
* SC, ST, SCA, BC, BCM, MBC, DNC பிரிவினர், அரசு இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை மாதத்திற்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை கிடைக்கும்.
தேர்வு முறை:
தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியன கிடையாது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலான தகுதிப் பட்டியல் (Merit List) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
* அதாவது விண்ணப்பதார்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 40 சதவீதமும், நர்சிங் உதவியாளர் பயிற்சி சான்றிதழில் இருந்து 60 சதவீதமும் என சேர்த்து மொத்தம் 100 சதவீதத்திற்கு எடுத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்தப்பட வேண்டும். SC, SCA, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.300 ஆகும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tnmrbnaw26.onlineregistrationform.org/MRBNAW/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் ஜனவர் 19 ஆகும்.
* விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 8, 2026 ஆகும்.












Click it and Unblock the Notifications