ரேஷன் கடை ஊழியர்கள் தேர்வு .. மாவட்ட வாரியாக வெளியாகும் முடிவுகள்.. 4 லட்சம் பேருக்கு நல்ல செய்தி
சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர், 925 எடையாளர் பணிக்கு மாவட்ட வாரியாக தேர்வான ரேஷன் ஊழியர் தேர்வு விபரம் வெளியிடப்பட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர், 925 எடையாளர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கடந்த ஆண்டு அறிவித்தது.

இதில் விற்பனையாளர் பணியிடத்துக்கு 10ம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக 9 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதே போல, கட்டுநர் பணிக்கு 8ம் வகுப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி தகுதியான லட்சக்கணக்கானோர் கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் விண்ணப்பித்து இருந்தனர். குறிப்பாக சொல்வது என்றால், விற்பனையாளர் பணிக்கு 3.75 லட்சம் பேரும், எடையாளர் பணிக்கு 41000 பேரும் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடம் மாவட்ட வாரியாக நேர்காணலும் நடத்தப்பட்டது. அத்துடன் தகுதியானவர்கள் மார்ச் இறுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதமும் ஏற்பட்டது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிய பின்னரே நேர்காணல் தேர்வர்கள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன் காரணமாக தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டு பதவி உயர்வு மூலம் பணியிடம் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை மேற்கொண்டது.
இதனிடையே அந்த பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில், நாகை, கன்னியாகுமரி ஆகிய இரு மாவட்டங்களில் வேலைக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வானவர்கள் விபரம் சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒவ்வொரு மாவட்டங்களில் வேலைக்கு தேர்வானவர்கள் பட்டியல் விவரம் முறையாக வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுவரை எத்தனை மாவட்டங்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் எந்த தேதியில் வெளியிடப்படும் என்ற விபரமும் இதுவரை கூட்டறவுத்துறை வெளியிடவில்லை.
இந்நிலையில் சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகளை முறையாக வெளியிட வேண்டும் என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரேஷன் கடை வேலைக்கு விண்ணப்பித்து நேர்காணல் முடிந்து தங்களுக்கு வேலை கிடைக்குமா என்று பலரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்ட வாரியாக முடிவுகளை அறிய கீழ்கண்ட முகவரியில் பார்க்க முடியும்.
அரியலூர் மாவட்ட ரேஷன் கடை முடிவு www.drbariyalur.net
செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் www.drbcgl.in
சென்னை மாவட்ட ரேஷன் கடை முடிவு www.drbchn.in
கோவை மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் www.drbcbe.in
கடலூர் மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் www.drbcud.in
தர்மபுரி மாவட்ட ரேஷன் கடை முடிவு www.drbdharmapuri.net
திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbdindigul.net
ஈரோடு மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drberd.in
கள்ளக்குறிச்சி மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbkak.in
காஞ்சிபுரம் மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbkpm.in
கன்னியாகுமரி மாவட்ட ரேஷன் கடை முடிவு drbkka.in
கரூர் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbkarur.net
கிருஷ்ணகிரி மாவட்ட ரேஷன் கடை முடிவு drbkrishnagiri.net
மதுரை மாவட்ட ரேஷன் கடை முடிவு drbmadurai.net
மயிலாடுதுறை மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbmyt.in
நாகப்பட்டினம் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbngt.in
நாமக்கல் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbnamakkal.net
நீலகிரி மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbngl.in
பெரம்பலூர் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbpblr.net
புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbpdk.in
ராமநாதபுரம் மாவட்டம் ரேஷன் கடை முடிவு drbramnad.net
ராணிப்பேட்டை மாவட்ட ரேஷன் கடை முடிவு drbrpt.in
சேலம் மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbslm.in
சிவகங்கை மாவட்ட ரேஷன் கடை முடிவு drbsvg.net
தென்காசி மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbtsi.in
தஞ்சாவூர் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbtnj.in
தேனி மாவட்ட ரேஷன் கடை முடிவு drbtheni.net
தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbtut.in
திருச்சிராப்பள்ளி மாவட்ட ரேஷன் கடை முடிவு drbtry.in
திருநெல்வேலி மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbtny.in
திருப்பத்தூர் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbtpt.in
திருப்பூர் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbtiruppur.net
திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbtvl.in
திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடை முடிவு drbtvmalai.net
திருவாரூர் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbtvr.in
வேலூர் மாவட்ட ரேஷன் கடை முடிவு drbvellore.net
விழுப்புரம் மாவட்ட ரேஷன் கடை முடிவுகள் drbvpm.in
விருதுநகர் மாவட்ட ரேஷன் கடை முடிவு vnrdrb.net












Click it and Unblock the Notifications