8ம் வகுப்பு முடித்தாலே போதும்.. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை!பெண்களுக்கும் வாய்ப்பு
ராணிப்பேட்டை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராணிப்பேட்டையில் காலியாக உள்ள சீசனல்(பருவகால) பில் கிளர்க் மற்றும் சீசனல் வாட்ஸ்மேன் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. சீசனல் பில் கிளர்க் பணிக்கு 80 பேர், சீசனல் வாட்ச்மேன் பணிக்கு 80 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சீசனல் பில் கிளர்க் பணிக்கு பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். சீசனல் வாட்ச்மேன் பணிக்கு ஆண்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சீசனல் பில் கிளர்க் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி இளங்கலை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் படிப்பை படித்திருக்க வேண்டும். சீசனல் வாட்ச்மேன் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிசி, பிசி(எம்), எம்பிசி, டிஎன்சி விண்ணப்பத்தாரர்களுக்கு 2 வயது வரையும், எஸ்சி, எஸ்டி, எஸ்சி(ஏ) விண்ணப்பதாரர்களுக்கு 5 வயது வரையும் தளர்வு உண்டு. வயது வரம்பானது 01.07.2022 தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
சீசனல் பில் கிளர்க் பணிக்கு ரூ.3,449 முதல் ரூ.5,285 மாதசம்பளம் வழங்கப்படும். இதுதவிர தினசரி போக்குவரத்து படியாக ரூ.120 வழங்கப்படும். சீசனல் பில் வாட்ஸ்மேன் பணிக்கு மாதம் ரூ.3,449 முதல் ரூ.5,218 சம்பளமும் தினசரி போக்குவரத்து படியாக ரூ.100ம் வழங்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்வர்கள் உரிய சான்றுகளுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்ட அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நான்காவது ஏ பிளாக், ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 10ம் தேதியில் இருந்து வினியோகம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பம் செய்ய மே மாதம் 3ம் தேதி கடைசி நாளாகும்.

-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications