தமிழக அரசு பஸ்சில் டிரைவர் & கண்டக்டர் வேலை.. 3,274 பணியிடங்கள்! 2 நாள்தான் டைம் இருக்கு! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3274 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே தகுதியும் ஆர்வமும் இருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

தமிழக அரசுப்போக்குவரத்து கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகங்கள் வாயிலாக சென்னை நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்கள் மூலம் தொலை தூர நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

tnstc-recruitment-3274-driver-and-conductor-posts-registration-ends-in-2-days-dont-miss-it

3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள்

இப்படி தமிழ்நாடு முழுவதும் 8 போக்குவரத்து கழக மண்டலங்கள் வழியாக பல்வேறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான பேருந்துகளை இயக்க 1 லட்சத்திற்கு மேற்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணியில் உள்ள பல லட்சம் பேர் இந்த பணி அறிவிப்பை ஆர்வத்துடன் பார்த்து இருப்பார்கள். இந்த நிலையில்,தான் தமிழக அரசுபோக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதிதான் கடைசி நாளாகும். இரண்டு நாட்களே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து விடுங்கள். இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

பெருநகர போக்குவரத்து கழகம் லிமிடெட் (சென்னை எம்டிசி) - 364
மாநில விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) - 318
தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) - 322
தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) - 756
தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (சேலம்) - 486
தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (கோயம்புத்தூர்) - 344
தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (மதுரை) - 322
தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) - 362

கல்வி தகுதி:

போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கல்வித் தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்து இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 1.1.2025 அன்று தேதிபடி 18 மாதங்கள் கட்டாயம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.205 அன்று தேதிப்படி 24 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ் டி, பிரிவினர் என்றால், 24 முதல் 45 வயது வரை விண்ணபிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 160 செ.மீட்டர் உயரம் உடையவராக இருத்தல் வேண்டும். இதேபோன்று குறைந்தது 50 கிலோ எடை உடையவராகவும் இருத்தல் வேண்டும். நல்ல கண்பார்வை பெற்றவராக இருத்தல் வேண்டும். எவ்வித உடல் குறைபாடுகள் இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

ரூ.1180 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 590 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.04.2025 ஆகும். இன்னும் இரண்டு நாட்களே கால அவகாசம் இருப்பதால் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரகள் உடனடியாக விண்ணப்பிக்கவும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://onlinereg.in/arasubus/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+