Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Wipro வேலைவாய்ப்பு.. டிப்ளமோ மட்டுமே போதும்! மாத சம்பளத்துடன் பிடெக் படிப்பை இலவசமாக படிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவில் இருந்து வெளியான வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான தேதி என்பது செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளம் வழங்கப்படுவதுடன் ‛பிடெக்’ படிப்பை பயிலவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies). சுருக்கமாக விப்ரோ என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

it job job

அந்த வகையில் தற்போது இந்தியா முழுவதும் உள்ள விப்ரோ நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போது விப்ரோவில் School of IT infrastructure Management என்ற பிரிவில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படிப்பை 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்ணுடன் 2023, 2024 படிப்பை முடித்தவர்களும், 2025ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். தொலைதூர கல்வி மூலம் 10, 12ம் வகுப்பு படித்திருக்கலாம் ஆனால் டிப்ளமோவை பார்ட் ஃடைம், தொலைதூர கல்வி மூலம் முடித்திருக்க கூடாது. கண்டிப்பாக கல்லூரி சென்று டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.

சேரும் போதே ரூ.75,000 போனஸ் + மாத சம்பளம்.. Wipro தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. நாளை கடைசி நாள்


அதுமட்டுமின்றி டிப்ளேமாவில் கண்டிப்பாக கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பிசினஸ் கணிதம், அப்ளைட் கணிதம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. டிப்ளமோ படிப்பை பொறுத்தவரை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு மாத சம்பளமாக ரூ.12,400, 2ம் ஆண்டு ரூ.15,488, 3ம் ஆண்டில் ரூ.17,553, 4வது ஆண்டில் ரூ19,918 வழங்கப்படும். இந்த சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பிடெக் படிப்பை படிக்க விப்ரோவில் இருந்து ஸ்பான்ஷர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. படிப்புக்கான செலவு முழுவதும் விப்ரோ நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். விப்ரோவில் பணியாற்றி கொண்டே பிடெக் படிப்பை இலவசமாக முடிக்கலாம்.

TCS வேலைவாய்ப்பு.. பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்போருக்கு குட்நியூஸ்.. நாளை கடைசி நாள்


இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 4 ரவுண்டுகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முதலில் ஆன்லைன் அசஸ்மென்ட் என்ற வகையில் தலா 20 நிமிடங்கள் என்று மொத்தம் 80 நிமிடங்கள் வரை முதல் ரவுண்ட் நடக்கும். இதில் முதலில் Verbal, 2வது Analytical, 3வது Quantitative, 4வது Written Communication ஆகியவை இருக்கும். அடுத்ததாக 2வது ரவுண்ட்டில் Bussiness Discussion, 3வது ரவுண்ட்டில் எச்ஆர் டிஸ்கஷன், 4வது ரவுண்ட்டில் Free Skill Agreement இருக்கும். சர்வீஸ் அக்ரிமென்ட் என்பது மொத்தம் 48 மாதங்களாகும். அதாவது மொத்தம் 4 ஆண்டுகள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 ஆண்டு கட்டாயம் பணி செய்ய வேண்டும். அதற்கு முன்பு பணியை விடும் பட்சத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+