"அனுபவம் வேண்டாம்".. Zoho நிறுவனத்தில் சென்னையில் பணி.. எந்த டிகிரி முடித்தாலும் விண்ணப்பிக்கலாம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஜோஹோவின் தற்போதைய அறிவிப்பின்படி டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 6 மாத அனுபவம் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். 2014 ல் இருந்து டிகிரி முடித்தவர்கள் முதல் 2025ம் ஆண்டில் படிப்பை முடிப்போரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்கா கஸ்டமர்களுடன் போனில் பேசும் திறமை இருக்க வேண்டும். கஸ்டமர்களுடன் இ-மெயில், சாட் முறையில் பேச வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். கஸ்டமர் சர்வீஸ் ஸ்கில், கஸ்டமர்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருக்க வேண்டும். தனித்து பணியாற்றும் திறமை இருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்று கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும்.
நைட்ஷிப்ட் மற்றும் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற ஆர்வமாக இருக்க வேண்டும். குறிப்பாக US Shift-ல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம் என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications