குழந்தை நீதி கதைகள்: ஓவியனின் கையில் கிடைத்த மாயாஜாலம்
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ்.. எப்படி இருக்கீங்க.. உங்களுக்கு படம் வரைதல் பிடிக்குமா? குழந்தைகள் என்றாலே ஓவியங்களுக்கு குறைவிருக்காது. நம்ம இப்போ ஒரு ஓவியரோட கதையை பற்றி தான் படிக்க போறோம். வாங்க கதைக்குள்ள போலாம்.
ஒரு அழகான கிராமத்தில் மிகவும் திறமை வாய்ந்த இளைஞன் ஓவியம் வரைந்து வாழ்ந்து வந்தான். அவனது ஓவியங்கள் மிகவும் அழகாக உயிரோட்டமாக இருக்கும். கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் ரோஹனின் ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். இருந்தாலும் அவன் எதிர் பார்த்த வருமானம் அவனுக்கு கிடைப்பதில்லை.

ரோஹன் இதனால் கொஞ்சம் கவலையாக இருந்தான். அவன் தாத்தாவும் ஒரு ஓவியர் என்பதால் அவரது பழைய பொருட்களை தேடி எடுத்து கொண்டிருந்தான். தாத்தாவின் பழைய பொருட்கள் இருக்கும் ட்ரங் பெட்டியை திறந்தான். உள்ளே தூசி அடைந்த சில ஓவியங்கள் இருந்தன. அதில் ஏதோ திடீரென ஒரு சிணுங்கல் சத்தம் கேட்டது.
ரோஹன் பயந்து போய் எலி இருக்கும் என ஒரு நொடி பயந்து பெட்டியை விட்டு விலகினான். அதில் இருந்து அச்சச்சோ என்னா தூசி என ஒரு குரல் கேட்டது. ரோஹனுக்கு பயம் அள்ளியது. பெட்டியில் இருந்து ஒரு ப்ரஷ் அந்தரத்தில் பறந்தது.
ரோஹன் முகம் பயத்தில் வெளுத்து போனது. அடடா.. பயப்படாதே என ப்ரஷ் பேச ஆரம்பித்தது. நான் உன் தாத்தாவிற்கு மிகவும் விருப்பமான ப்ரஷ் என்றது. ஒரு பக்கம் பயத்துடன் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாக ப்ரஷை வேடிக்கை பார்த்தான் ரோஹன். அவன் அருகில் வந்து தனது முடியை சிலுப்பி விட்டது ப்ரஷ். சட்டென ரோஹன் தும்மியதும், சாரி என்று சொல்லி சிரித்தது ப்ரஷ்.
ரோஹனும் சிரிக்க, அவன் இதய துடிப்பு சாதாரண நிலைக்கு திரும்பியது. பின்னர், ப்ரஷுடன் பேச ஆரம்பித்தான் ரோஹன். தனது ஓவியங்களை காண்பிக்க ஆரம்பித்தான். ரோஹனின் ஓவியங்கள் அழகாக இருக்கிறதே என ப்ரஷ் சொன்னது. ஆனால் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கவில்லை என புலம்பினான் ரோஹன்.
அதுதான் கவலையா? அதை விடு. என்னால் பேச மட்டும் தான் முடியும் என நினைத்தாயோ? சரி என்னை பிடி.. உனக்கு பிடித்த எதையாவது வரை என்று சொல்ல, ரோஹன் ப்ரஷை கையில் பிடித்து ஒரு அழகான நீல நிற வண்ணத்து பூச்சியை வரைந்தான். வரைந்து முடிந்த அடுத்த கணமே பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. அதை பார்த்ததும் ரோஹன் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தான்.
அதன் பிறகு ஆப்பிள் வரைந்தான். அப்படி அவன் வரைய வரைய எல்லா பொருட்களும் உயிருடன் வர ஆரம்பித்தன. இதனால் அவனுக்கு ஒரு யோசனை தோணியது. ப்ரஷ்ஷிடன் அதை சொல்லிவிட்டு, இருவரும் கிராமத்தின் முக்கிய பகுதிக்கு சென்றனர்.
ஓவியம் வரையக்கூடிய பலகையில் பல நிறங்களில் வண்ணத்து பூச்சிகளை வரைந்தான். வரைந்து முடித்த அடுத்த கணமே, அனைத்து பட்டாம்பூச்சிகளும் பறந்து மக்களுக்கு ஒரு அழகிய காட்சியை கொடுத்தன. இது மக்களுக்கு ஒரு மேஜிக் போல இருந்தது. அவர்கள் கேட்ட ஒவ்வொரு பொருளையும் வரைந்து அசத்தினான் ரோஹன். பல நாட்கள் வரையாமல் பெட்டியில் தூங்கி கொண்டிருந்த ப்ரஷும் சந்தோசமாக வரைந்து கொண்டே இருந்தது.
மக்களும் ரோஹனுக்கு விருப்பம் போல காசை கொடுத்தனர். அதுமட்டுமில்லாமல் உலக அளவில் மக்கள் ரோஹனின் ஓவியத்தை காண கிளம்பி வந்தனர். ரோஹனின் திறமை பெரிதாக பேசப்பட்டது. ரோஹன் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தான். மேஜிக் ப்ரஷ் வாழ்க்கையில் வந்த பிறகு ரோஹன் தனது வாழ்வாதாரத்தை மட்டுமில்லாமல் தனது கிராம மக்களின் வாழ்க்கையையும் வண்ணமயமாக மாற்றினான்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications