குழந்தை நீதி கதைகள்: நட்சத்திரங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்.. காத்திருக்கும் ஆபத்து!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், எப்படி இருக்கீங்க.. பரீட்சைக்கு தயாராக ஆரம்பித்துவிட்டீர்களா? கொஞ்சம் ஓய்வெடுக்கும் நேரத்தில் இந்த விசித்திர கதையை படிக்கலாமா.. வாங்க கதைக்குள்ள போலாம்.
ரொம்ப காலங்களுக்கு முன்பாக, ஒரு அழகான மலை கிராமம் இருந்தது. அங்குதான் மிகவும் சுட்டியாக, அனைவரிடமும் கனிவாக பழக கூடிய அகிரா வாழ்ந்து வந்தாள். அதே காலத்தில் தான் ஒரு கொடூர மந்திரவாதியும் இருந்தான். அவன் கைகளில் நீண்ட கோல் ஒன்றை வைத்திருப்பான். அது எப்போதுமே மின்னி கொண்டே இருக்கும்.

அகிராவின் வீடு மலையில் தான் இருந்தது. அவளுக்கு நட்சத்திரங்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். தினமும் இரவு வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களிடம் பேசி கொண்டே இருப்பாள். அதை பார்த்து பலரும் கேலி செய்து இருக்கிறார்கள். ஆனாலும் இரவு ஜன்னலின் அருகில் இருந்து கொண்டு அந்த நட்சத்திரங்களை பார்க்கவில்லை என்றால் அவளுக்கு தூக்கம் வராது.
அதே சமயம் அந்த கொடூர மந்திரவாதியான மலைக்கா, பல இடங்களில் யாரையோ தேடி அலைகிறான். ஒருவேளை அது அகிராவாக இருக்கலாம். ஆனால் அவன் மந்திர சக்திக்கும் அவள் சிக்கவில்லை. அது ஏன் என்று தான் அவன் தேடி அலைய ஆரம்பித்திருக்கிறான். காடு, மலை விடாமல் அவனது தேடுதல் வேட்டை பயங்கரமாக இருந்தது.
இந்த பக்கம் இது எதுவும் அறியாத அகிரா நட்சத்திரங்கள் பின்னால் அலைந்து கொண்டிருந்தாள். திடீரென ஒருநாள் இரவு அகிரா வானத்தை பார்த்து கொண்டிருக்க, அப்போது வால் நட்சத்திரத்தை பார்த்தாள். பார்த்த உடனே எனக்கு சக்திகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, வானத்தில் இருந்து அவள் மேல் ஒரு நட்சத்திரம் விழுந்து ஏதோ மின்னும் தூசியை போல நெற்றியில் தூவி சென்றது.
அகிரா அதை பொருட்படுத்தாமல் அன்று இரவு தூங்கிவிட்டாள். விடிந்ததும் எழுந்து கண்ணாடி பார்க்கும்போது தான் அவளுக்கு தெரிகிறது அவளது கண்கள் வெள்ளி நிறங்களில் மாறி உள்ளது. அவளது தலைமுடிகள் ஜொலிக்க ஆரம்பித்தது. அவளுக்கு உள்ளுக்குள் பயங்கர மகிழ்ச்சி. அவள் எதிர்பார்த்தது போல சக்தி கிடைத்திருக்குமா என்பதை சோதித்து பார்க்க எண்ணினாள். நாட்கள் செல்ல செல்ல, நட்சத்திரங்களை கட்டுப்படுத்தும் சக்தி தன்னிடம் இருப்பதாக அகிரா கண்டுபிடித்தாள்.
கையில் இருந்த நட்சத்திர கோலை உயர்த்தி நட்சத்திரங்களை வரிசையாக வர சொன்னாள், நட்சத்திரங்களும் வந்தன. அவளது பொறுப்பு இப்போது புரிந்தது. பயணம் செய்பவர்களுக்காக வழிகாட்டி நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்தினாள். நிலவின் ஒளியில் இருந்து, மக்களை குணப்படுத்தும் வித்தையை கற்று கொண்டாள். இப்படி நாட்கள் கடக்க, இந்த விஷயத்தை அந்த கொடூர மந்திரவாதி மலைக்கா கண்டுபிடிக்கிறான்.
முதல் வேலையாக அகிராவை தேடி வருகிறான். அகிராவின் மலைக்கிராமத்திற்கு வந்து அவளை கடத்தி செல்கிறான். அவளுக்கு உதவ யாராலும் முடியவில்லை. இரவு நேரம் வருகிறது. அகிராவின் சக்திகளை தன் பக்கம் ஈர்க்க பல மந்திரங்களை சொல்கிறான். அகிரா அவனிடம் பேசி பார்க்கிறாள், கத்தி பார்க்கிறாள். அவன் எதற்கும் தலை சாய்க்கவில்லை.

நீ யார் என்னை ஏன் இப்படி கட்டி வைத்திருக்கிறாய் என கத்த, அவன் யார் என்பதை இப்போது சொல்கிறான். மலைக்கா வேறு யாரும் இல்லை அகிராவின் அண்ணன் தான். அதே மலைக்கிராமத்தில் வாழ்ந்த மலைக்காவிற்கு சக்திகள் கிடைக்க, அதன்மேல் ஆசை அதிகமாகி உலகை ஆட்டி படைக்க விரும்பினான். இதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்தாள் அகிரா.
அவனுடன் பயங்கரமாக போராடினாள் அகிரா. ஆனால் அவன் விடுவதாக இல்லை. அப்போது திடீரென வானத்தில் இருந்து ஒரு பெரிய ஒளி வந்ததது. மலைக்காவிடம் இருந்த மொத்த சக்தியையும் எடுத்து அகிராவிற்கு கொடுத்தது. இதை எதிர்பார்க்காத அகிரா தன் அண்ணனிற்கு எதுவும் ஆக வேண்டாம் என மன்றாடி கேட்டுக்கொண்டாள்.
அந்த ஒளி அவனை ஒரு சாதாரண மலைவாசியாக மாற்றியது. மலைக்காவிற்கு எந்த ஒரு நிகழ்வுமே இப்போது நினைவில் இல்லை. இருவரும் தங்கள் கிராமத்திற்கு சென்றார்கள். அகிரா தனக்கு கொடுக்கப்பட்ட சக்தியை வீணாக்காமல் மக்களுக்காக பயன்படுத்தினாள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications