• search
keyboard_backspace

மோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்

Subscribe to Oneindia Tamil

லே: பிரதமர் மோடியின் இன்றைய லடாக் பயணத்தில் இடம்பெற்றிருந்த நிமு நகரம் ஒரு புகழ்பெற்ற லடாக் சுற்றுலாதலங்களில் ஒன்றாகும்.

லடாக்கின் கிழக்கில் சீனா ஆக்கிரமிக்க முயன்றதை இந்திய ராணுவ வீரர்கள் தீரமுடன் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது சீனாவின் இந்த கொடூர தாக்குதல். இந்த நிலையில் லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று திடீர் பயணம் மேற்கொண்டார்.

லடாக்கின் நிமு பகுதியில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களிடையே எழுச்சிமிக்க உரையாற்றினார் பிரதமர் மோடி. எல்லையை இரவும் பகலும் குளிரிலும் கடும் பனியிலும் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தையும் உந்துசக்தியையும் பிரதமர் மோடியின் இந்த பயணமும் எழுச்சி உரையும் கொடுத்திருக்கும் என்பது மிகை அல்ல.

 Ladakhs famous tourist spot Nimu

பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் உச்சரிக்கப்பட்ட முக்கியமான பெயர் நிமு. லடாக் என்பது ஏதோ பனிப்பிரதேசங்கள் சூழ் தனி உலகு அல்ல. இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு கொட்டிக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம். எங்கெங்கு காணினும் எத்தனை அழகு! எத்தனை அழகு! என பிரமிக்க வைக்கும் பெரும் இயற்கைப் பிராந்தியம். இதில் ஒன்றுதான் நிமு சிறுநகரமும்.

விசித்திரமான பூர்வோத்திரம்

லடாக் யூனியன் பிரதேசமானது லே, கார்கில் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது. லடாக்கின் பூர்வோத்திர வாழ்க்கை முறை நமக்கு திகைப்பைத் தரக் கூடியது. 1940 களுக்கு முன்பு வரை லடாக்கியர்கள் உடன்பிறந்தவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ளக் கூடிய பண்பாட்டை கடைபிடித்தனர் என்பது நமக்கு ஆச்சரியமான ஒன்று. லடாக்கில் பெளத்தர்களும் சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் வசிக்கின்றனர்.

லடாக்கின் சாந்தி ஸ்தூபி, வண்ண வண்ண கொடிகள் பட்டொளி வீசி பறக்கும் கண்ணுக்கினிய மனதுக்கு அமைதி தரும் எண்ணற்ற பவுத்த மடாலயங்கள். டிராங் பனிப்பாறை, ட்செமோ கோட்டை, கழுதைகளுக்கான சரணாலயம், ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு, சர்ச்சைக்குரிய பாங்கோங் த்சோ ஏரி, கார்டோங் கணவாய், நுப்ரா பள்ளத்தாக்கு என நீண்டு கொண்டே போகிறது லடாக்கின் உள்முகம்.

லே லடாக் பிராந்தியதின் கொள்ளை அழகை வெளிப்படுத்தக் கூடியது சாந்தி ஸ்தூபி. பளிங்கு வெள்ளை நிறத்தில் பனிசூழ் மலைகளின் பின்னணியில் அதுவும் இரவு நேரத்தில் அடேங்கப்பா கொள்ளை அழகாக மனதை ஆக்கிரமித்துவிடும் சாந்தி ஸ்தூபி. இப்படித்தான் லே லடாக்கின் ஒவ்வொரு சுற்றுலா தலமும் மிரட்சியை தரக் கூடியதாக இருக்கின்றன.

லடாக்கின் இயற்கை பேரதிசயங்களில் ஒன்றாக திகழ்வது மேக்னெட்டிக் மலை. ஆம் வாகனங்களில் பயணிக்கும் உங்களை உங்களை அறியாமலேயே இந்த பகுதியின் ஈர்ப்பு சக்தி திக்குமுக்காட வைத்துவிடும். அப்படி ஒரு இயற்கையின் பேரதிசயம் புதைந்துகிடக்கும் பெருமலையாக திகழ்கிறது இந்த மேக்னெட்டிக் மலை. லேவில் பனிசூழ் மலைகளின் பின்னணியில் அமர்ந்திருக்கும் பிரமாண்ட அரண்மனை நம் கண்களைவிட்டு ஒருபோதும் அகன்றுவிடாது.

நதிகளின் சங்கமம்

இந்தப் பட்டியலில்தான் பிரதமர் மோடி இன்று பயணித்த நிமு சிறுநகரமும் இடம்பெற்றுள்ளது. இது சிந்து மற்றும் ஜான்ஸ்கர் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருக்கிறது. சிந்து நதியில் நீர் சறுக்கு சாகசகாரர்கள் தங்களை மெய்மறந்து உச்சசாகசங்களை காட்டுகிற இடமாக திகழ்கிறது. லே நகரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் நிமு நகரம் அமைந்துள்ளது.

சிந்து நதிக் கரை சிறு நகரமான நிமுவில் வெப்பநிலை என்பது கோடையில் 40 டிகிரி செல்சியஸாகவும் குளிர் காலங்களில் -29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இங்கிருந்து 7 கி.மீ தொலைவில்தான் நாம் மேலோ சொன்ன மேக்னெட்டிக் மலையும் இருக்கிறது. நிமு நகரம் இன்னொன்றுக்கும் புகழ்பெற்றது. அது என்ன தெரியுமா? ஆச்சரியப்பட்டு போவீர்கள்.

நிமு நகரத்து டீ சமோசாதான் அவை..லே லடாக் சுற்றுலா செல்கிறவர்கள் நிமு நகரத்து டீயையும் சமோசாவையும் சுவைக்காமலும் ருசிக்காமலும் திரும்புவதில்லை. அதேபோல் சோலாபூரிக்கும் நிமு நகரம் ஃபேமஸ். லே, லடாக்கின் பல குக்கிராமங்களுக்கான இடைவழி சிறுநகரமாக திகழ்கிறது இந்த நிமு எனும் அழகிய இயற்கை பெருநிலம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒருபோதும் நிமுவில் கால் வைக்க மறந்துவிடாதீர்கள்!

  PM Modi's Hospital Visit | India Army Statement | Oneindia Tamil

  இங்கே டீயானது, வெண்ணய், உப்பு கலந்து ஒருவிதமாக தயாரிக்கின்றனர். இதை பெரிய பாத்திரத்தில் வைத்து கலக்குகின்றனர். இந்த செய்முறையின் அடிப்படையிலேயே குர்குர் சா என இதனை அழைக்கின்றனர். ஆனால் இப்போது இந்திய தயாரிப்பு பாணியாக சர்க்கரை கலந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. பிற ஆதிகுடி சமூகங்களைப் போல இங்கேயும் பிரத்யேகமான பாரம்பரிய மதுவகைகள் வீட்டுத் தயாரிப்புகளாக விழா கால சிறப்பு உணவாகவே பயன்படுத்துகின்றனர். இங்கே ஜூலை முதல் செப்டம்பர் வரை சுற்றுலா செல்லலாம்!

  English summary
  Nimu is a small village situated in the South East part of Ladakh.
  Related News
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  Just In