“அன்பான மனைவி.. அழகான துணைவி”.. குடுக்க மாட்டேனே.. என்னா பண்ணுவ.. நீ என்னா பண்ணுவ?
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் திருமணக் கனவை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவம் எவ்வளவு கொண்டாட்டத்திற்குரியதாக இருந்ததோ, அதே அளவு அவர்களது திருமணப் பருவம் மீமர்களால் கலாய்க்கும்படி உள்ளது. அதிலும் குறிப்பாக அவர்களது காதல் மற்றும் திருமணம் எப்போதுமே, 2கே கிட்ஸ்களுடன் ஒப்பிடப்பட்டு மீம்ஸ்களாக இணையத்தில் அதிகம் பகிரப்படுவதுண்டு.
இப்போதும் அப்படித்தான், 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து, இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். 90ஸ் கிட்ஸ்கள், ""அன்பான மனைவி.. அழகான துணைவி" வேண்டும் எனக் கேட்பது போலவும், அதற்கு கடவுள், "குடுக்க மாட்டேனே.. என்னா பண்ணுவ.. நீ என்னா பண்ணுவ?" என பதில் கூறுவது போலவும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications