அன்று வாயை விட்ட கூல் சுரேஷ்.. இன்று இப்படி ஆயிடுச்சே.. பிக்பாஸ் மட்டும் பார்த்திடக்கூடாது!
சென்னை: பிக்பாஸ் குறித்து கூல் சுரேஷ் பேசிய பழைய வீடியோ இப்போது நெட்டிசன்களால் பகிரப்படுகிறது. அதில் கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பதும். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதுமாக உள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் கூல் சுரேஷை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 1ம்தேதியான ஞாயிறு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்,.

இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர் கூல் சுரேஷ்தான் என்பதால் இதை பார்த்து பலரும் திகைத்து போனார்கள்.ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அதிகம் விமர்சனம் செய்தது இவர் தான்.இவரே பிக்பாஸில் பங்கேற்றதால் தான் ரசிர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், கூல் சுரேஷ்க்கு அடுத்தபடியாக பிரபல யூடியூப்பரான பூர்ணிமா ரவியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அதன்பின்னர் சன் டிவியில் தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா தாஹாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இவர் தற்போது விஜய் டீவியில் வெற்றிகரமான சீரியலான மௌன ராகம் 2 தொடரின் மூலம் பிரபலமாக உள்ளார்.
இவர்களை தவிர அருவி பட இயக்குநரின் இரண்டாவது படமான வாழ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான வினுஷா தேவியும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக வந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்ற மணிச்சந்திராவும் பங்கேற்றுள்ளார். லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக நடித்து பிரபலமானவர் அக்ஷயா உதயகுமாரும் பிக்பாஸ் வீட்டில் தான் இருக்கிறார்.
எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு? pic.twitter.com/fzw79GVqZo
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) October 3, 2023
நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் வனிதா விஜயகுமாரின் மகளுமான ஜோவிகா, பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக உள்ளே வந்துள்ளார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கையும், நடனக் கலைஞருமான ஐஷூ, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணுவிஜய், ஸ்டேண்ட் அப் காமெடி கலைஞரான மாயா எஸ்.கிருஷ்ணா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக நடித்த சரவண விக்ரம், பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் , நடிகை விசித்ரா, தமிழ் சிறுகதை எழுத்தாளர் பாவா செல்லத்துரை, மாடலிங் துறையில் பணியாற்றிய விஜய் வர்மா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் ஞாயிறு அன்று வந்தனர்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற யாருமே இதுவரை ட்ரோல் செய்யப்படவில்லை. இனிமேல் நிகழ்ச்சிகளில் அவர்கள் செய்யும் செயல்களை வைத்து ட்ரோல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.இந்த சூழலில் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான இரண்டாவது நாளே ட்ரோல் மெட்டீரியலாக கூல் சுரேஷ் மாறி உள்ளார். அதற்கு காரணம், ஒரு காலத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 'எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு' என்று மோசமாக விமர்சித்தார். அவர்களின் நடனம் குறித்து சொல்லக்கூடாத வார்த்தைகளில் விமர்சித்தார். இன்று அதே பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் நுழைந்து இருப்பதால் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளார். கூல் சுரேஷ் பேசிய பழைய வீடியோவையும் போட்டு நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications