Jana nayagan Memes:விஜய்யோட முதல் படம் நாளைய தீர்ப்பு! அவரோட கடைசி படத்துக்கு நாளைக்கு தீர்ப்பு!
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து சென்னை ஹைகோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மீம்ஸ்களை தெறிக்கவிடுகிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படம் நாளை ரிலீஸாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் தாமதமானதால் இந்த படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இது ஒரு புறமிருக்க, ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் ஜனநாயகன் படத்தை ஏற்கெனவே பகவந்த் கேசரியுடன் வைத்து கிண்டலடித்து வந்தனர்.

தற்போது படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்தும் அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதில் ஒரு மீமில், விஜய்யோட முதல் படம் நாளைய தீர்ப்பு, அவரோட கடைசி படத்திற்கு நாளைக்கு தீர்ப்பு என கிண்டல் செய்து வருகிறார்கள்.

அது போல் இன்னொரு மீம்ஸில் சொன்ன தேதில படம் இறங்கும் என்றும் தேதி மாத்தின வரலாறு எங்க கிட்ட எப்போதுமே கிடையாது என்றும் விஜய் சொல்வது போல் இந்த நெட்டிசன் கூறுகிறார்.

விஜய் ரசிகர் ஒருவர், ஜனநாயகன் படம் பார்க்க தனது அம்மாவுக்கு ஆபரேஷன் என கூறி மேனேஜரிடம் இருந்து விடுமுறை வாங்கிக் கொண்டார். ஆனால் தற்போது படம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டதால் அவர் ஆபிஸுக்கு செல்கிறார். அங்கு மேனேஜர் "அம்மாவுக்கு ஆபரேஷன்னு சொல்லிட்டு ஆபிஸ் வந்துட்டீங்களே"னு கேட்கிறார். அதற்கு அந்த நபர், இல்லை சார் அம்மாவுக்கு ஆபரேஷன் ஒத்தி வச்சிட்டாங்க"ன்னு ஜனநாயகன் படம் ஒத்தி வைப்பை கூறுகிறார்.
மேலும் ஆபரேஷன் தேதி முடிவு செய்ததும் அந்த லீவை எடுத்துக்கிறேன் என்கிறார். அதற்கு மேனேஜர் லீவை யார் கன்பார்ம் செய்வாங்க, கேவிஎன் புரொடெக்ஷன்ஸா என மேனேஜர் கேட்டதும் , "அய்யோ மேனேஜர் கண்டுபிடிச்சிட்டாரேனு" அந்த பணியாளர் அதிர்ச்சி ஆவதாக இந்த மீம் விளக்குகிறது.

போன பொங்கலுக்கு மதகஜராஜாவை திடீர்னு இறக்கிவிட்டது போல் இந்த பொங்கலுக்கு துருவ நட்சத்திரத்தை இறங்கிவிடுங்க. பாவம் அந்த விக்ரமாவது மூச்சு விட்டுக்கட்டும் என ஜனநாயகன், பராசக்தி ஆகிய இரு படங்களுக்குமே சென்சார் கிடைக்காமல் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்துள்ளதைத்தான் இந்த நெட்டிசன் அவ்வாறு கூறுகிறார்.
Jokes Apart! ஜனநாயகன் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது கிடைக்கும் உத்தரவை பொறுத்து ஜனநாயகன் போகி பண்டிகைக்காவது ரிலீஸாகுமா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications