For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கதான் அப்பவே சொன்னோம்ல.. பீம் காப்பாத்திடுவாருன்னு.. இதென்னய்யா புதுக்கதையா இருக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு அதிரடியாக 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

சமூகவலைதளங்களில் இப்போது இந்த டாபிக் தான் மீம்ஸ்களாக டிரெண்டிங்காகி வருகிறது. அவற்றில் பல பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் செம கலாயாக உள்ளது.

இதோ அப்படிப்பட்டவைகளில் சில உங்களின் பார்வைக்காக..

டீச்சர்ஸ் ரியாக்சன்:

டீச்சர்ஸ் ரியாக்சன்:

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ள போதும், டீச்சர்கள் தான் செம கடுப்பாகி இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் தான் பொதுத்தேர்விற்காக பாவம் பாத்ரூம் கூட போகத் தெரியாத குட்டீஸ்களை மாங்கு மாங்கென தயார் செய்து வந்தனர். அதைத் தான் இந்த மீம்ஸ் சொல்கிறது.

நான் தான் சொன்னேன்ல..

நான் தான் சொன்னேன்ல..

இந்த மீம்ஸில் வீதியில் விளையாட மறந்து கார்ட்டூன்களில் பொழுதைக் கழிக்கும் குழந்தைகள், பொதுத்தேர்வு ரத்திற்கும் பீம் தான் காரணம் என்கிறார்கள் சின்னப்பிள்ளைத்தனமாக.

இப்போவே வெற்றி

இப்போவே வெற்றி

பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறுவோமா, இல்லையா என்ற கவலையில் இருந்த சிறார்கள், இப்போதே மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டனர்.

உங்களுக்கு நோ

உங்களுக்கு நோ

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்தது போல, தங்களுக்கும் பொதுத்தேர்வை ரத்து செய்வார்களா என பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறதாம். அதற்கு தக்க சார்பில் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் இந்த மீம்ஸ்-ல்.

English summary
These are some jolly memes on 5th and 8th standard board exams plan canceled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X