கடைசியில் கக்கூஸ்ல வச்சு நமீதாவை சண்டை போட வச்சுட்டீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஓவியாவை நமீதாவும், ஜூலியும், காயத்ரி பாடாய்படுத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக கக்கூஸ் கழுவாத ஓவியா அந்த கக்கூஸை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று நமீதா போர்க் கொடி உயர்த்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஜூலியை ஆர்த்தியும், காயத்ரியும் அழ வைத்து வந்தனர். அப்போது ஜூலியின் சண்டித்தனம் தெரியாமல் மக்களின் அனுதாபங்கள் அவருக்கு கிடைத்தது.

தற்போது அவரது சுயரூபம் தெரிந்து மக்கள் அவரை கழுவி ஊற்றுகின்றனர். இந்நிலையில் எலிமினேஷனில் இருந்த ஓவியா சேஃப் ஸோன் சென்றுவிட்டதால் அவர் மீது இந்த 9 பேருக்கும் பொறாமை. அதனால் அவரை எப்படியாவது வெளியேற்றியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

கிளீனிங் டீம்

கிளீனிங் டீம்

ஓவியா பிக்பாஸ் வீட்டின் கிளீனிங் டீமில் உள்ளார். அவர் பாட்டுக்கு தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று பார்த்து வருகிறார். ஆனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை அறிந்த நமீதா, ஜூலி, காயத்ரி ஆகிய மூவரும் ஓவியாவை பிராண்டி எடுக்கின்றனர்.

கக்கூஸ் கழுவுதல்

கக்கூஸ் கழுவுதல்

டாய்லெட்டை ஓவியா இரு முறை சுத்தப்படுத்துகிறார். ஆனால் எச்சில் பட்ட பொருள்களை தின்றுவிட்டு மிச்சத்தை அப்படியே பிரிட்ஜிக்குள் வைக்கும் மிஸ் பரிசுத்தம் நமீதாவுக்கோ அப்பப்போ கக்கூஸை கிளீன் செய்ய வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

ஓவியாவின் விளக்கம்

ஓவியாவின் விளக்கம்

இதற்கு ஓவியாவோ ஒரு நாளைக்கு என்னால் இரு முறை தான் கக்கூஸை சுத்தப்படுத்த முடியும். அந்த இடைப்பட்ட நேரத்தில் சுத்தமாக இல்லாவிட்டால் மட்டுமே நான் டாய்லெட்டை கிளீன் செய்வேன். ஒரு வேளை ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள் செல்லும் நேரங்களில் கிளீன் செய்து கொள்ளுங்கள் என்றார் ஓவியா.

கரம் வைத்து அட்டாக்

கரம் வைத்து அட்டாக்

இதில் என்னங்க தப்பு இருக்கு. இதற்கு இந்த நமீதா ஒரே ஆட்டம் போடுகிறார். அவருக்கு சக்தி, ஜூலி, காயத்ரி எல்லாம் ஒத்து ஊதுறாங்க. இதனால் நேற்று எபிசோடில் நமீதா சொல்கிறார், கக்கூஸை சுத்தம் செய்யாத ஓவியாவுக்கு, தான் உணவை சமைக்க மாட்டேன் என்றும், அவர் கக்கூஸையே பயன்படுத்தக் கூடாது என்று பிக்பாஸ் வீட்டின் தலைவர் உத்தரவிட வேண்டும்.

என்ன அபத்தம்?

என்ன அபத்தம்?

கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் ஓவியா சாப்பிடக் கூடாது, கக்கூஸ் பயன்படுத்தக் கூடாது என்று நமீதா கொக்கரிப்பதில் எத்தனை வன்மம். அய்யோ, ரியல் பாலிடிக்ஸ் பிச்சை வாங்கனும் போல... அந்தளவுக்கு மலிவான அரசியல் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஓவியா என்ன செய்கிறார் அவருக்கு அத்தனை ஓட்டுக்கள் விழுகிறதே என்று தெரிந்து கொள்ள உடனே தான் வெளியேற வேண்டும் என்கிறார் நமீதா.

இல்லாத ரூலை இருப்பதாக சாதிக்கும் ஜூலி

இல்லாத ரூலை இருப்பதாக சாதிக்கும் ஜூலி

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு போட்டியாளரை வெளியேற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் வெளியேற்றி விடலாமாம். இதை சொல்வது ஜூலி. அப்படி ஒரு விதி இருந்திருந்தால் பிக்பாஸ் வந்த 2-ஆவது எலிமினேஷனிலேயே ஜூலி வெளியேறி இருப்பாரே. அழுத ஜூலிக்கு ஒரு குழந்தைக்கு கூறுவது போன்று ஆறுதல் கூறிய ஓவியாவுக்கு துரோகம் இழைக்க துணிந்து விட்ட ஜூலியின் பச்சோந்தித்தனமான புத்தியை என்னவென்று சொல்வது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bigg boss Tamil: Namitha has severe revenge on Oviya and asked her teammates to ban her to use the toilets.
Please Wait while comments are loading...