மழை பெய்யுது.. நிக்குது.. ரிப்பீட்டு!.. மாநாடு பாணியில் பறக்கும் மழை மீம்ஸ்கள்!
சென்னை: சென்னையில் கனமழை குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்த மழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். அவற்றில் சில வாசகர்களுக்காக...

மாமழை
மழையே
பூமி தாயை குளிர்விக்க
வந்த மாமழையே...
மண்ணில் உயிர் வாழ
வேண்டும் மழையே...

பூமி
பொதுவாகவே பூமியின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் நிரம்பியது. அடிப்படையில் பாதுகாப்பானதும், எளிமையானதும் என்பதால் பள்ளமான பகுதிகள் கண்டறியப்பட்டு அவைகள் நீர்நிலைகளாக மாற்றப்பட வேண்டும்.
#மழை

மழைநீர்
மண்ணில் மலர்ந்த உயிர்களுக்கெல்லாம்
மழைநீர் ஓர் உயிர் நீர் !
மழையரசன் மனம் கனிந்து
மழையாக மண்ணில் பொழிந்தால்
மட்டற்ற பயிர் விளைந்து
மாநிலத்தில் நஞ்சையும் புஞ்சையும்
மலைபோல் பொன் விழையும் பூமியாகும்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் !!!

குடி உயர
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்.
#மழை மழையைப் போற்றுவோம்.

லீவு
கலெக்டர் லீவுன்னு சொல்லுற வரைக்கும் பெய்யுற அடைமழை, அடுத்த நிமிடம் நின்று வெயில் அடிக்க ஆரம்பிக்குதே.. இது என்ன மாதிரியான டிசைன்

என்ன பன்ன போறீங்க
வீட்டை சுற்றி தண்ணி தேங்கினால் டெங்கு உருவாகும்னு சொன்னீங்களே
இப்ப ஊரை சுற்றி தண்ணி தேங்குதே என்ன பன்ன போறீங்க ஆபிசர்
Recommended Video

மாநாடு மழை
மழை பெய்யுது.. நிக்குது.. ரிப்பீட்டு.. மழை பெய்யுது.. நிக்குது.. ரிப்பீட்டு!


Click it and Unblock the Notifications
