வருணனின் செல்லப் பிள்ளை தான் சென்னை.. பாசமழை அங்கே தான் உச்சம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்துவருவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் மழை தொடர்பான மீம்ஸ்கள் குவியத் தொடங்கியுள்ளன.

சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

மழை தொற்றிக்கொண்டது

மெர்சல் மறந்து மழை தொற்றிக் கொண்டது.
#மழைகாலம் என மெர்சலை நினைவுப்படுத்தியுள்ளார் இந்த வலைஞர்

பாசமழை அங்குதான் உச்சம்

வருணனின் செல்லப் பிள்ளை தான் #சென்னை. பாச மழை அங்கே தான் உச்சம்... என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

கால் போட்டு புக் பண்றதா?

கால் டாக்ஸி புக் பண்றதா கால் போட் புக் பண்றதாங்கிற குழப்பம் இன்னும் ஒரு நாள் மழை பெய்தால் சென்னை மக்களுக்கு வந்துவிடும்போல... என்கிறார் இந்த வலைஞர்

சேகரிப்பு தொட்டி சென்னை

நாட்டின் மிகப்பெரிய மழை நீர் சேகரிப்பு தொட்டி #சென்னை.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்

ரோட்டுல படகு சவாரி

வாத்தியாரே சென்னைல ஒரே மழை ரோட்டுல
படகுசாவாரி ஆரம்பிச்சிருப்பாங்க போய்
என்ஜாய் பன்னலாம் வாத்தியாரே என கலாய்க்கிறது இந்த மீம்

மழை செய்கிறது

#கூவ_நதிகள்
சென்னை மாநாகராட்சி செய்யாததை
மழை செய்து விடுகிறது
#சுத்தம் என கூறுகிறது இந்த டிவிட்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of chennai rain. Its raining over Tamil nadu including Chennai. Lots of memes also roaming on Social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற